பக்கம்:மறைமலையம் 29.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

இயல் - 7

சாதி வேற்றுமைகளை ஒழிக்கும் வழிகள்

இனி, மக்களுக்குப் பெருந்தீங்கு பயப்பனவாகிய சாதி வேற்றுமைகளை ஒழிக்கும் வழிகள் தெரிதல் வேண்டு மாயின், முன் நாளில் அவ் வேற்றுமைகளைக் கிளறி விட்ட மூலங்களை அறிந்தே அவ்வாறு செய்தல் வேண்டும். ஒருவனுக்கு ஒரு பொல்லாத நோய்வந்தால் அதனை நீக்கலுறுவோன், அந்நோயை உண்டாக்கின மூலத்தை அறிந்தாலன்றி, அவன் அதனை முற்றும் நீக்கமாட்டுவான் அல்லன். ஒரு நோயின் மூலத்தை அறிந்து அதனை அடியோடு களைந்த அளவானே அந்நோய் முற்றும் ஒழிந்துபோம். அதுபோலச் சாதி வேற்றுமைகளை உண்டாக்கிய மூலங் களையும் நன்கு ஆராய்ந்துகண்டு, பின்னரவ் வேற்றுமை களை ஒழித்தலே இன்றியமையாது செயற்பாலதாகும். அற்றேல், அம் மூலங்கள் யாவையோவெனிற் கூறுதும்:

ஏனை

மேலே நான்காம் இயலில், உழவுதொழிலையறிந்த வேளாளர்கள் அத்தொழிலாற் பல உணவுப்பண்டங்களைப் பெருக்கி, அதற்குமுன் தாம் உண்டுவந்த இறைச்சியுணவை விட்டுச் சைவவுணவே கொள்ளத் தலைப்படமையினையும், அதுமுதல் தம்மில் ஊன்உணவு ஊன்உணவு கொள்வாரான யோரைத் தம்மின் இழிந்தோராக விலக்கிவைத்துத் தாம் அவரின் உயர்ந்தோரானமையினையும், அங்ஙனஞ் சைவரான தம்முள்ளுங் கல்வியிலுங் கடவுள் வழிபாட்டிலும் அகந் தூய்மை புறந்தூய்மையிலும் மேம்பட்டு நின்றோர் ‘அந்தணர்’, 'பார்ப்பனர்' என மேற்குலத்தவர் ஆனமையினையும், அந்நெறியில் இயன்றமட்டும் நின்று குடிகளைப் பாது காத்தலிலும்,

சல்வம் பெருக்கி உழவுதொழிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/176&oldid=1591844" இலிருந்து மீள்விக்கப்பட்டது