பக்கம்:மறைமலையம் 29.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

153

குழியிலேயே அவரை மீண்டும் விழ அழுத்துவராயின், மேல்நிலைக்கு வருவோரைக் கெடுத்த பெருந் தீவினைக்கும், ஊன் உண்பார் கூட்டத்தில் மீண்டுஞ் சேர்ப்பிக்கப்பட்ட அவர் மீண்டும் மீன் முதலான உயிர்களின் இறைச்சியை உணவு கொள்ளவேண்டி வருதலால் அதனால் உண்டாகும் அவ்வுயிர்களின் கொலை வினைக்கும் அம்மேலோர் உள்ளாகிச் சிறிது காலத்தில் தாமுந் தம்மினத்தவரும் இப்பிறவியிலேனும் அல்லது வரும்பிறவி யிலேனும் புலையராவர். அற்றன்று, “யாங்கள் பண்டு தொட்டுப் புலால் உண்ணாக் கொல்லா அறத்தில் வழுவாது நிற்றலாற், புதிதாகப் புலால் உணவு நீக்கி வருவாரை எம்முடன் சேர்த்தல் ஆகாது” என்று உரைப்பராயின், அவருரை அருளொழுக்கத்திற்குமாறான தீவினை உரையேயாகும். உயிர்க் கொலையும், அதனால் வரும் ஊனுணவும் நீக்கி அருளொழுக்கத்தைக் கைக்கொண்டவர், அங்ஙனமே கொலைபுலை நீக்கிவருவாரைத் தம்முடன் சேர்த்து, ஊன்உண்ணார் தொகையைப் பெருக்கிவந்தா லன்றி உலகிற் 'கொல்லா அறம்' பரவமாட்டாது; கொல்லா அறம் பரவாத வரையில், எண்ணிறந்த உயிர்கள் கொல்லப்படுதலால் வருந்து வினை சைவரையுஞ் சாராது ஒழியாது. ஊனின் பொருட்டுத் தாம் உயிர்களைக் கொல்லாவிடினும், அதற்காகக் கால்வாரைத் தடைசெய்யாமலுங், கொலைபுலை தவிர்ந்து வருவாரைத் தம்முடன் சேராமலும் விடுதலாற், கொலை புலை மேன்மேற் பெருகுதற்குத் தாமும் ஏதுவாயிருத்தல் பற்றிச், சைவர்களுக்கும் அக் கொலைத் தீவினையிற் பெரும்பங்கு உண்டு. சைவராகிய தம்மைக் கொடியார் சிலர் கொல்லவருகையில், அங்ஙனங் கொல்லவருவாரைப் பிறர் விலக்காதிருந்தால் அச் சைவரது நிலை எப்படிப்பட்டதாய் இருக்கும்! விலக்காதிருந்தாரை அச்சைவர் குற்றஞ் சொல்லா திருப்பரோ! அங்ஙனமே உயிர்க்கொலையை விலக்காத சைவர்க்கும் பெருந்தீவினையிற் பங்கு உண்டென்று அறிந்து கொள்க. உயிர்க்கொலையைத் தடைசெய்யாமையால் வருந் தீவினை பெரிதாயினாற்போலவே, அதனைத் தடைசெய்து காலை புலை தவிர்ந்தாரைத் தம்முடன் சேர்த்துக் கொள்வதாற் சைவர்க்கு வரும் நன்மையும் அளப்பிலதாகும்; புதிய சைவர்களைத் தம்முடன் சேர்த்தலாற் சைவர்களின் தொகை மேன்மேற்பெருகும்; இறைவனாற் படைக்கப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/178&oldid=1591846" இலிருந்து மீள்விக்கப்பட்டது