பக்கம்:மறைமலையம் 29.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மறைமலையம் லயம் - 29

துரைத்தனத்தார்

இக்

சில கிழமைகளுக்குமுன் கல்கத்தாவில் நடந்த 'இந்து முஸ்லீம்’ கலகமே இதற்கொரு சான்றாம். அரசியல் நெறிவழுகுவாத நம் ஆங்கில கலகத்தை உடனே அடக்காதிருந்தால், இக்கலகம் எவ்வளவு அஞ்சத்தக்கதாய் முடிந்திருக்கும்’. சாதிவேற்றுமை என்னும் பெரும் புயற்காற்றாற் சின்னபின்னப் படுத்தப்பட்டுச் சிதறிக் கிடக்கும்

நம்

இந்துமக்களில், தலைவரெனத் தம்மைக் கூறிக்கொள்வோர் இந் நிலைமைகளைச் சிறிதாயினும் ஆராய்ந்துபாராமல், நம் அரசை இந்நாட்டி

ஆங்கில கின்றார்களே!

னின்றுந்

"மாதவர் நோன்பும் மடவார் கற்புங்

காவலன் காவல் இன்றித் தங்கா”

துரத்தப்பார்க்

என்று நம் பழைய ஆன்றோராகிய இளங்கோ வடிகள் 'சிலப்பதிகாரத்'தில் அருளிச்செய்திருக்கும் அறவுரையை அவர்கள் அறியார் கொல்லோ! ஆங்கில ஆ அரசினர் இந்நாட்டைவிட்டு அகலும் அன்றைக்கே இது பிணக் காடாம் என்பதை அவர்கள் உணரார்கொல்லோ! நம் இந்துக்களுக்கு எல்லாவகையானுந் தீராப் பெரும பகைவராய்த், தம்முள் ஒற்றுமையும் அதனால் வலிமையும் தமக்கு உதவிபுரியுந் துலுக்க அரசர்களும் நன்கு வாய்க்கப் பெற்றாராய், இவ்விந்து நாடெங்கணும் பெருந்தொகை யினராய்க் குடிகொண்டிருக்குந் துலுக்கர்களைப் பார்த்தாயினும் நம்மவர்கள் சாதிவேற்றுமை யினை யொழித்துத் தமக்குள் ஒற்றுமை எய்தலாகாதா! ஓர் எழுநூறு ஆண்டுகளாக இவ்விந்தியநாடெங்கும் நிகழ்ந்துவரும் மாறுதல்களை நடுவுநிலைமையோடு நின்று ஆராய்ந்து காண்பவர்களுக்கு, இங்குள்ள எந்தச் சாதியாரேனும் பிறசாதிக் கலப்பின்றித் தனிச்சாதியாராய் வாழ்ந்திருக்கலாம் என்று ஐயமின்றிச் சொல்வதற்குச் சிறிதும் இடம் இல்லாமையாலும், வெவ்வேறினமாய் நிற்கும் மக்கள் ஒன்று கலத்தலாற் பிறக்கும் பிள்ளைகள் அறிவு மிகுதியும் உடல் வலிமையும் பெற்று உலகிற்குப் பெரிதும் பயன்படுதலை நாளுங் காண்கின்றோ மாகலிற் சாதிக்கலப்பு மிகவும் வேண்டற் பாலதாய்த் தோன்றலாலும், இம்மை மறுமைப் பயன்களை விழையும் உண்மைச் சைவர்கள் பிறசாதியாரிலிருந்து புலாலுண்ணாப் புனிதராய் வருவாரைத் தம்மொடு சேர்த்து வலிமையிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/185&oldid=1591853" இலிருந்து மீள்விக்கப்பட்டது