பக்கம்:மறைமலையம் 29.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

161

அறிவிலுந் தொகையிலும் அருளொழுக்கத் திலும் மிகுந்து நலம்பெறக் கடவராக!

6

காணப்படுகின்றனவோ,

இனி, மற்றைத் தாழ்ந்த வகுப்பினரிற் கொலைபுலை ல தவிர்ந்தாரை உண்மைச் சைவர்கள் தம்மினத்திற் சேர்த்துக் காள்வது ஒன்றின் மட்டும் அமையாது, கல்வியில் மிக்காரையுங், கடவுள் வழிபாட்டிற் சிறந்தாரையும், அகந் தூய்மை புறந்தூய்மை வாய்ந்தாரையும் பிறப்பிழிபு நோக்காது தம்மொடுசேர்த்து உண்ணல் கலத்தல்களைச் செய்தல் வேண்டும். எல்லா மக்களிடத்தும் எல்லா நலங்களும் அமைதல் அரிதாகையால், எவ்வெவரிடத்து எவ்வெந் நலங்கள் அவ்வந் நலங்கள் பற்றியே அவ்வவரைப் பாராட்டுதல் வேண்டும்; அவரிடத்திற் காணப்படாத நலங்களுக்காக அவரைக் குறைசொல்லல் ஆகாது. சில நலங்கள் உடையராய் வேறு சில நலங்கள் இலராயினாரையுந் தம்மொடு சேர்த்து அளவளாவிவரின், அவர் உண்மைச் சைவரின் சேர்க்கையால் வரவர எல்லா நலங்களும் நிரம்பப்பெறுவர். தமக்குள்ளேயே சைவ வொழுக்கத்தின் வழுவிப் புலாலுணவு கொண்டுங் குடித்தும் பரத்தையரை மருவியும் ஏமாற்றங்கள் செய்தும் வருவார் பலர் இருக்க, உண்மைச் சைவர்கள் அவர்களை நீக்க மாட்டாமற் சிறப்புநாட்களில் அவர்களோடு உடனிருந்து உண்டும், அவர்கள்பாற் பெண்கொண்டு கொடுத்தும் அளவளாவி வாழவில்லையா? அங்ஙனமே மற்றைத் தாழ்ந்த வகுப்பாரிலுந் திருந்தத்தக்காராய்ச், சில நலங்களேனும் உடையார் இருந்தால், அவர்களை உண்மைச் சைவர்கள் தம்மினத்தில் உடனே சேர்த்தல் இயலாதாயினும், அவர்களோடு முதலில் நெருங்கிப் பழகவேண்டு மளவுக்குப் பழகி, அப் பழக்கத்தால் அவர்கள் முற்றுந் திருந்தக்காணின், பின்னர் அவர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளல் இன்றியமையாததாகும்.

பிற சாதியார்கள் கல்வியுங் கடவுள்வழிபாடுந் தூய்மையும் இலராதல்பற்றி, அவரை விலக்கிவைத்து, அவர்கள் திருந்துதற்குரிய வழிவகைகளைச் செய்யாமல் நம்மவர் இன்னும் பராமுகமாயிருப்பரானால்,

அவர் களெல்லாருங் கிறிஸ்துவர், துலுக்கர், பௌத்தர் முதலான பிறசமயத்தவரால் எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/186&oldid=1591854" இலிருந்து மீள்விக்கப்பட்டது