பக்கம்:மறைமலையம் 29.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் -29

இந்துசமயப் பகைவராகிச், சில நூற்றாண்டுகளில் இவ்விந்திய நாடெங்கும் நிறைந்து, நம்மனோரும் நம் சைவவைணவ சமயங்களும் இருந்தவிடமுந் தெரியாமல் வேரோடு அற்றுப்போகச் செய்குவர். நம்மனோர் செய்த கொடிய சாதிக்கட்டுப்பாடுகளின் துன்பம் பொறுக்கமாட்டாமை யாலன்றோ, கணக்கிறந்த நம் இந்துமக்கள் கிறிஸ்துவ ராய்விட்டனர்! நம்மனோரில் நாளொன்றுக்கு முந்நூறுபேர் விழுக்காடு கிறிஸ்துவராய் விடுகின்றார்களென்று, அதனை ஆராய்ந்த நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டேம். நாளொன்றுக்கு முந்நூறுபேர் கிறிஸ்துவராய்விட்டால், ஒரு திங்களுக்கு ஒன்பதினாயிரம் ஆகச் சில நூற்றாண்டுகளில் இந்தியநாடு முழுதுங் கிறிஸ்துவராலேயே நிரப்பப்படும். கிறிஸ்துவர்கள் தங்களது சமயத்தைப் பரப்பும்பொருட்டு ஒவ்வொருநாளும் எண்ணிறந்த நூல்களைப் பரப்பி வருகின்றார்கள்; தம்மிற் கற்றவராயுள்ள குருமார்களுக்கு மிகுந்த சம்பளங்கள் கொடுத்து, அவர்களை

ஆயிரக் கணக்காகப் பலப்பல இடங்களுக்கும் போக்கித், தம்முடைய சமயக் கோட்பாடுகளை எல்லார்க்கும் எடுத்துச்சொல்லி, விரும்பினோரைத் தமது சமயத்தில் ஏற்றுக்கொள்கின் றார்கள். நம்மனோராற் சிறிதேனும் பாராட்டப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏழையெளிய சாதியார்கள் இருக்கும் இடங்கள் எங்குங் கிறிஸ்துவக் குருக்கள்மார் போய்

ங்காங்குப் பள்ளிக்கூடங்கள் திறப்பித்து, அவர்கட்கு ஊண்கொடுத்து உடைகொடுத்துக் கல்வியறிவு புகட்டி, அவர்கள் துப்புரவாயிருக்கக் கற்பித்து, அவர்களைச் சிறந்த அலுவல்களிலும் அமரச் செய்து ங்ஙனமெல்லாம் அவர்கட்குப் பற்பல நன்மைகளைப் புரிந்துவருதலால், அந்நன்மைகளைப் பெற்று உயரும் அவ்வெளிய சாதியார்கள் அக் குருமார்கள்பால் மிக்க நன்றியறி வுடையவர்களாய்த், தமக்கு ஏதோர் உதவியுஞ் செய்யாமல் தம்பால் எல்லா உதவிகளும் பெற்றுக் கொண்டு தம்மைப் பட்டினியிலும் பசியிலும் மிகத் தாழ்ந்தநிலையிலுங் கிடக்கவிட்டுத் தம்மை மீளாத் துன்பத்திற்கு ஆளாக்கிவரும் நம்மனோரையும் நம்முடைய சைவவைணவ

சமயங்களையும் நீங்கி

அக்கிறிஸ்துவக் குருக்கள்மார் காட்டும் கிறிஸ்துவசமயம் புகுகின்றார்கள். எளிய சாதியார்கட்கு உதவிபுரிவார் இல்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/187&oldid=1591855" இலிருந்து மீள்விக்கப்பட்டது