பக்கம்:மறைமலையம் 29.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

163

காலங்களிலே, மேற்சாதியாரெனக் கூறிக் கொள்ளும் இரக்கமற்ற கொடிய இந்துமக்களே, நீங்கள் அவர்களை ஆடு மாடு கழுதை குதிரை பன்றி நாய் முதலான விலங்கினங் களினுங் கடைப்பட்டவராக நடத்தியும், அவர்களுக்கு அரைவயிற்றுக் கூழுணவுகூடக் கிடையாமற் செய்தும், அவர்களில் ஆண் மக்களாயினார் கோவணத்திற்குமேல் ஒருசிறு கந்தைத்துணி கூட உடுக்க விடாமலும், அவர்களிற் பெண்மக்களாயினார் தமது மார்பினை மறைத்து மேலாடை உடுப்பதற்குங்கூட மனம்பொறாமற் சினந்தும், அவர்கள் தூய்மையாயிருக்கக் கல்வியறிவுதானும் புகட்டாமலும் நும்மோடொப்ப இறைவனாற்படைக்கப்பட்டஅம்மக்களைப் பெருந்துன்பத்திலும் அறியாமையிலும் இருத்தி, அவர்கள் பால் எல்லாவகையான வேலைகளையும் வாங்கிவந்தீர்கள்! நுங்களுடைய ஈரமற்ற வன்னெஞ்சத்தையும் இரக்கமற்ற கொடுஞ்செயல்களையுங்

கண்ட

ன்றோ, அவ்வேழை மக்கட்கு உதவிபுரிதற் பொருட்டு அருட்கடலாகிய ஆண்டவன் ஆங்கிலநன் மக்களையும் அவர் வழியே கிறிஸ்துவக் குருமார்களையும் இந்நாட்டுக்கு வரும்படி அருள்புரிந்தான்! அவர்கள் வராதிருந்தால் பல கோடிக் கணக்காயுள்ள அத் தாழ்த்தப்பட்ட பழந் தமிழ்மக்களின் நிலைமை இன்னும் எவ்வளவு துன்பத்திற்கு உள்ளாகி யிருக்கும்! வ்வாறு எல்லா இரக்கமும் வாய்ந்த இறைவனால் ஏவப்பட்டு ஆங்கில அரசுங் கிறிஸ்துவக் குருமாரும் இங்குவந்து அவ் வேழைமக்கட்கும் பிறர்க்கும் எல்லாவகை யான நலங்களும் புரிந்துவருவதைப் பார்த்தும், ஐயோ! இந்துமக்களே, ஓ போலிச்சைவர்களே, இன்னும் நுங்கட்கு இரக்கமும் நல்லறிவும் வந்தபாடில்லையே! நுங்களை நுங்கள் கால்வழியற்றுப்போக வேரோடு வெட்டி மாய்த்து வரும் பொல்லாத கோடாரியாய்ச் சாதிவேற்றுமை இருப்ப துணராது, அதனை நுமக்குச் சிறப்புத் தருவதாக எண்ணி நீங்கள் மகிழ்வது எவ்வளவு பேதைமை! ஊரின் நடுவே வெடிமருந்துக் கொத்தளத்தின் மேலிருந்து கொள்ளிக் கட்டையைச் சுழற்றி மகிழ்வோனுக்கும் நுங்கட்கும் யாம் வேற்றுமை காண்கிலேம். ஒரு தீப்பொறியானது அக்கொத் தளத்தை வெடிக்கச்செய்து அவனையும், அவ்வூரிலுள்ளா ரனைவரையுஞ் சிறிது நேரத்திற் படுசாம்பராக்கி விடுதல் போலப், பாழுஞ் சாதிவேற்றுமையால் இனி யுண்டாவதற்கு மும்மரித்துநிற்கும் ஒருசிறு கலகமானது கலகமானது நுங்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/188&oldid=1591856" இலிருந்து மீள்விக்கப்பட்டது