பக்கம்:மறைமலையம் 29.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் - 29 -

அப்பொது இடத்திலும் பொல்லாத சாதிவேற்றுமையை நுழைத்து, இறைவன் படைத்த மக்களுட் பெரும்பாலாரைத் தாழ்ந்த சாதியாராக்கி, அவர்களைக் கோயிலினுள் நுழையவிடாத கொடுஞ்செய்கை யினுங் கொடியது வேறு யாதிருக்கின்றது! தாழ்ந்தசாதியார்கள் கோயிலினுட் நுழையவிடாத கொடுஞ்செய்கையினுங் கொடியது வேறு யாதிருக்கின்றது! தாழ்ந்தசாதியார்கள் கோயிலினுட் புகுந்து தம்மை வணங்கலாகாதென்று கடவுள் தடைசெய்திருக் கின்றாரா? அப்படியொன்று மில்லை யென்பதும், சாதி இறுமாப்புக் கொண்டோர்க்குக் கடவுள் அருள்புரியாமல், தாழ்த்தப் பட்ட சாதியார்க்கே அவர் மிகுதியும் அருள்புரிந்திருக் கின்றா ரென்பதும் உண்மை வரலாறுகள் பலவற்றால் மேலே விளக்கிக்காட்டின மன்றோ? அல்லது கடவுளை நேரேகண்டு அவனதருளைப் பற்ற உண்மையடியார் களாவது தாழ்த்தப்பட்ட சாதியார்களை உள்ளே விடுதலாகாதென்று விலக்கியிருக்கின்றார்களா? அப்படியும் இல்லையே. அவர்கள், ஈழக் குலச்சான்றாராகிய ஏனாதி நாயனாரையும், பறைக் குடியினரான நந்தனாரையும், பாணர் குடியினரான திருநீலகண்ட யாழ்ப்பாணரையும், வண்ணார் குடிப்பிறந்த திருக்குறிப்புத் தொண்டரையும், எண்ணெய் விற்கும் வாணிகர் குடிப்பிறந்த கலியனாரையும் வணங்கி அவர்களைக் கோயிலினுள் நுழைய இடங்கொடுத்த மட்டில் அமையாது, அவர்களையெல்லாம் ஏனை நாயன்மார் திருவுருவங்களோடு உடன் வைத்து, அறுபத்து மூவராக ஒவ்வொரு சிவபிரான் திருக்கோயில்களிலும் ஒவ்வொரு நாளும் வழிபாடுசெய்து வருகவெனவுங் கட்டளையிட் டிருக்கின்றன ரல்லரோ? அக் கட்டளைப்படியே அந் நாயன் மார்கட்கு நாள் வழிபாடும் ஆண்டுவிழாவும் ஒவ்வொரு திருக்கோயில்களினுந் தொன்று தொட்டுச் செய்யப்பட்டு வருதலைப் போலிச் சைவர்கள் பார்த்ததில்லையா? இழிந்த சாதியாராகக் கருதப்பட்ட நாயன்மார்கள் சிவபிரானோடு ஒப்பக் கோயில்கடோறும் வைத்து வணங்கப்பட்டு வருகையில், அந்நாயன்மார் மரபிற் பிறக்குந் தவம்உடைய சான்றார், பறையர், செம்படவர், வண்ணார், எண்ணெய் வாணிகர் என்போரைத் தென்னாட்டுச் சிவபிரான் திருக்கோயில்களில் நுழையவிடாத போலிச் சைவரின் புல்லறிவினுந் தலையெடுப்பின் காடியவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/191&oldid=1591860" இலிருந்து மீள்விக்கப்பட்டது