பக்கம்:மறைமலையம் 29.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

167

வேறுண்டோ கூறுமின்கள்! இவர்களுடைய இக் கொடுமைக்கு அஞ்சி யன்றோ திருநெல்வேலி மாகாணத் திலுள்ள தாழ்த்தப்பட்ட சாதியாரில் எண்ணிறந்தோர் கிறிஸ்துமதம் புகுந்தனர்! இன்னும் புகுகின்றனர்! இவ்வாறு சைவசமயத்திற் பிறந்த மக்களெல்லாரும நாளுக்குநாட் கிறிஸ்துவராய்விட்டாற் பிறகு சிவபிரான் கோயில்களை வணங்க வருவார்தாம் யார்? துதானும் உணர்ந்து பார்க்குஞ் சிறியதோர் அறிவுதானும் இன்றிச், சைவசமயத்தவராய் இருக்கும் வரையில் தாழ்த்தப் பட்ட சாதியாரை முன்னேற வொட்டாமற் பலவகையால் ஈரநெஞ்சமின்றித் துன்புறுத்தித் தாமே, அவர்களைக் கிறிஸ்துவமதம் புகுமாறுசெய்துவிட்டு, அவர்கள் கிறிஸ்துவம் மதம் புகுந்து மேல்நிலைக்கு வந்த பின், அவர்கள்முன் அடக்கஒடுக்க வணக்கத்தோடு சென்று, பல்லை இளித்துக் காட்டியுங் கெஞ்சியமுகத்தோடு தலைகுனிந்து நின்றும், அவர்கற்பாற் பல உதவிகளைப்பெறும் போலிச்சைவரின் செயல் பெரிதும் அருவருக்கத்தக்கதா யிருக்கின்றதன்றோ? எல்லாச் சாதியினரையுங் கோயிலினுள் விடுத்து, அவருட் சிவபிரான் திருவடிக்கண் மெய்யன்பு பூண்டு ஒழுகினார்க்கு, அக் கோயில்களினுள்ளேயே திருவுருவங்கள் சமைத்து நிறுத்தி அவரை வழிபட்டுவரும் வழக்கந் தொன்றுதொட்டு நடைபெற்று வராநிற்பவும், அச்சிறந்த வழக்கத்திற்கு மாறாகப் போலிச் சைவர்கள் தாழ்ந்த வகுப்பினரைக் கோயில் களினுள்ளே விடுவதில்லையெனப் புதியதொரு போலி வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அப்போலி வழக்கத்தின் துணையால் ஆங்கில அரசரைத் தமக்குத் துணை கூட்டி வைத்துத், தாழ்ந்த சாதியாரைக் கோயிலினுள்ளே நுழைய விடாமல், அம்முயற்சியில் மட்டும் விடாப்பிடியாய் நிற்கின்றார்களே! நம் நாட்டவரும், நம் சமயத்தவரும், நம்முடைய வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டும் எல்லா உதவிகளையுஞ் செய்து வருபவருமான பறையர், சான்றார், ஏகாலியர், எண்ணெய் வாணிகர் முதலியோர்க்குக் கொடுமை செய்வதாகிய தீயவழியில்தானா இப் போலிச் சைவர்ளுக்கு இத்துணை முயற்சியும் விடாப்பிடியும் இருத்தல்வேண்டும்! தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் போலிச் சைவர்கள் இவ்வா றெல்லாம் மிக வருந்தி அவர்களின் அக்கொடுஞ்செயலை அருவருத்துப்பேசாநிற்ப, அப்போலிகள் எவருடைய மதிப்பைப்

வவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/192&oldid=1591861" இலிருந்து மீள்விக்கப்பட்டது