பக்கம்:மறைமலையம் 29.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

169

கொண்டாடும். அவர்கள் அங்ஙனஞ்செய்யாது தமது கொடுஞ்செயலிற் காழ்ப்பேறி நிற்பராயின், ஆங்கில அரசினரே திருவுளமிரங்கி எல்லா வகுப்பினருங்கோயிலின் உட்செல்லக் கட்டளையிடும் போது அப்போலிச்சைவரும் பிறருந் தம்மாற் செய்யலாவ தின்றி இழிபுற்று எல்லாரானும் ஏளனஞ் செய்யப்பட்டு மாழ்கி நிற்பரென்க.

னி, இச்சாதிவேற்றுமைக்கட்டுப்பாடுகளால் நம் தமிழ்மாதர்கள் ஆளாகி வருந் துன்பங்கள் மிகக் கொடியன வாயிருத்தலால், அவற்றை ஒழித்தற்கும் எல்லாரும விரைவில் முயலல் வேண்டும். 'நமக்குப்படிப்பும் வேண்டாம், பணமும் வேண்டாம், அழகும் வேண்டாம், நல்லாசாதியானாய் மட்டும் இருந்தாற்போதும், அவன் ஏழையாயிருந்தாலுங் கல்வியில்லாத வனாயிருந்தாலுங் கிழவனாயிருந்தாலுங் குற்றமில்லை' என்று சொல்லி அழகிய அறிவுள்ள நல்ல இளம்பெண்ணை ஒரு மடையனுக்காவது அல்லது ஒரு கிழவனுக்காவது கட்டி விடுகின்றனர்! ஆண்மக்களைப் போலவே பெண்மக்களுக்கும் அறிவுண்டு, இன்ப துன்பங்கள் உண்டு, விருப்பு வெறுப்புக்கள் உண்டு, பசி காமங்கள் உண்டு என்பதை நம்மனோர் சிறிதாயினும் உணர்ந்து பார்க்கின்றார்களில்லை. மகளிரை அறிவும் உணர்வும் அற்ற இயந்திரங்களாகவே நினைக்கின்றனர். உள்ளநாள் உள்ளமட்டும் ஆடவர்தமக்குக் குற்றேவல்செய்து வயிறுகழுவி அவர்க்கு இன்பந்தந்து தாம் துன்பத்தில் வைகும் எளிய விலங்குகளாகவே மாதர்கள் நடத்தப்படுகின்றனர். இசையாதவனுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட ஓர் ஏழைச் சிறுமி அவனாற் படுந்துன்பங்களைப் பொறுக்கமாட்டாமல் அவனைவிட்டு நீங்குவளாயின், அவளுக்குச் சிறிதும் ரங்காமல் அவள்மேற் பழிகூறுவாரே எங்கும் உளர்! ஒரு கிழவனுக்கு வாழ்க்கைப் படுத்தப்பட்டவள் சில நாட்களில் அவன் இறந்துபோக அழுதகண்ணுஞ் சிந்திய மூக்குமாய் உயிரற்ற பிணம்போற் காலங்கழிக்கும்படி தன் வாழ்நாள் முழுதுங் கட்டாயப்படுத்தப் படுகின்றாள்; அவள் அக் கடுங்கட்டுப்பாட்டிற் சிறிது பிசகுவளாயினும் அவட்கு வரும் பழிச்சொல்லுந் துன்பமும் அளவிடப்படா! இவ்வாறு

L

நம்பெண் மணிகளைத் துன்புறுத்தும் ஆடவர்கள் தாமாவது பிசகுபடாது நடக்கின்றார்களா? எனில், அதுவுமில்லை. ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/194&oldid=1591863" இலிருந்து மீள்விக்கப்பட்டது