பக்கம்:மறைமலையம் 29.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் -29 -

கெட்டவன் எத்தனைமுறை வேண்டுமானாலுந் தான் சாகுமட்டும் மகளிர் பலரை மணந்துகொள்ளலாம்; வேசிவீட்டிலேயே குடியாயிருக்கலாம்; தனக்குள்ள பொருளை யெல்லாங் குடிக்குங் கூத்துக்குஞ் சூதுக்கும் வம்புவழக்குக்கும் சலவழித்துவிட்டுத், தம் மனைவி மக்களைச் சோற்றுக்குந் துணிக்கும் அலைந்து திரியவிடலாம்; தான் எழுபது ஆண்டு ஆனாலும் பதினைந்தாண்டுள்ள ஒரு சிறுமியை மணந்து காள்ளலாம். வைகளைக் கேட்பாரில்லை. ஆனால், இவனுக்குப் பிணைக்கப்பட்ட ஏழைச்சிறுமியோ இக்கொடிய சாதிக்கிழவனைவிட்டு விலகுவளாயின், அவள் உடனே கற்பொழுக்கத்தில் வழுவியவள் ஆய்விடுவளாம்! ஐயகோ! அவனுக்குத் தாலியறுத்த அவள் பிறகு வேறொருவனை L மணந்து கொள்ளலாகாதாம்! அது சாதிக்குறைவாம்! பெண்மக்களை ஈ எறும்பு கொசுகுபோல் நசுக்கும் இத்தனை சாதிக் கொடுமைகள் ஓர்ஆலிலை மூக்குப்போலிருக்கும் இச்சிறிய தென்னாட்டி லன்றி, ஆலிலைபோற் பரந்த வேறெந்த நாட்டிலுங் காணப் படுவதில்லை. மற்றை நாடுகளில் உள்ள பெண்பாலார் ஆண்பாலாரோடொப்ப எல்லா உரிமைகளும் பெற்று இனிது வாழ்ந்துவருதலால், அவர்கள் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும் அறிவிலும் அழகிலும் ஆண்மையிலும் பிற நலங்கிளிலுஞ் சிறந்து உலகிற் பயன் பட்டு வாழ்கின்றனர். துன்பத்தில் உழலும் நம் இந்துமாதர் களின் வயிற்றிற் பிறக்கும் பிள்கைளோ அறிவில்லா மடையராய் அழகில்லா முசுக்களாய் அவற்றிற்கேற்ற தீய தன்மையுந் தீய செயலுமுடையராய்த் துன்பவாழ்விற்பட்டு உயிர்மாளுகின்றனர்!

விரைவில்

வ்வளாவுஞ் சாதி வேற்றுமையால் விளைந்த துவினையாகும்! ஒரு பெண்ணுக்கு ஏற்ற இளைஞன் எந்த மரபிற் பிறந்தவனா யிருந்தாலும், அவள் அவனை விரும்புவாளாயின் அவனுக்கே அவளை வாழ்க்கைப்படுத்துதல் வேண்டும். அப்போதுதான் மகளிர்க்குக் கற்பொழுக்கம் நிலைபெறும். ஏலாதவன் ஒருவனுக்குப் பிணைக்கப்பட்டவள் தனக்கேற்றவனைக் காண நெருங்கால் அவனை விரும்பாது இராள். ஃது எல்லா மக்களிடத்தும் மாற்றமுடியாத இயற்கையாக இறைவனால் அமைக்கப்பட்டிருக்கின்றது. முற்றுந்துறந்த முனிவர்களும்,

மக்களினுஞ் சிறந்த தேவர்களும் இவ்வியற்கையைக்

கடக்கமாட்டாது. தத்தளித்தனரென்றால், எளிய மக்கட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/195&oldid=1591864" இலிருந்து மீள்விக்கப்பட்டது