பக்கம்:மறைமலையம் 29.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

171

பிறப்பினரான ஏழை இளம்பெண்களைக் குற்றஞ் சொல்லுதல் அடுக்குமோ! ஓர் ளைஞன் தனக்கு இசையாதவளைத், தனக்குமேல் ஆண்டின் மூத்த ஒரு கிழவியை மணக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டால், அவன் உள்ளம் எப்படிக் கொதிக்கும்! அவன் அவ்வேற்பாட்டுக்கு இணங்கி நடப்பனா? அப்படித்தானே ஏழை யிளம் பெண்கள் மனமும் இருக்கும்! ஆதலாற் பெண்மக்களை அவர் தமக்கு ஏறற ஆண்மக்களோடு L மணஞ் செய்வித்தலே உடனே செயற்பாலது. சாதிக் கட்டுப்பாடுகளால் மகளிர் ஒழுக்கப் பிழைபடுதலும், அதனாற் பல தீங்குகள் விளைதலும் நாளுக்குநாட் பெருகுகின்றன! ஒரு சிறு சாதிக்குள்ளேயே நல்ல மணவாளன் கிடைத்த லரிது; ருவன் இருந்தாற் பெண்களைப்பெற்றோரிற் செல்வராய் உள்ளோர் போட்டிபோட்டுக்கொண்டு ஆயிரக்கணக்கான தொகைகளைக் கொடுத்து அவனை விலைக்கு வாங்கி விடுகின்றார்கள்! அங்ஙனம் விலைக்கு வாங்கப்பட்ட மணமகன் மேலுமேலுந் தன் மனைவியின் வழியே பொருள் பறிக்கும் பேரவாவுடையனாய்ப் போதலின், அவன்தன் மனையாளை இடையறாது துன்புறுத்துகின்றான். அதனால் அவ்விருவர்க் குள்ளும் உயர்ந்த காதலன்பு இல்லாதாகின்றது. கொழுநனும் மனைவியும் அன்பிலரானால் இல்வாழ்க்கை வெறும் பாழாகின்றது. இனிப் பொருள் கொடுத்து மணமகனைப் பெற வழி லாதவரோ தமது சாதியைக் கடந்து தாண்ட மாட்டாராய் இசையாதவனுக்குங் கிழவனுக்கும் பெண்ணைக் காடுத்துத் துன்புறுகின்றனர்! தன் கழுத்திற்குக் கயிறு தானேயிட்டுக்கொண்டதுபோல உண்மையில் இல்லாத சாதிவேற்றுமையினைத் தாமாகவே வகுத்துக்கொண்டு இவர்கள் இங்ஙனமெல்லாந் துன்புறு வதேன்! நல்லராய்த் தூயராய் இருப்பார் எக்குடிப் பிறந்தவராயிருப்பினும் அவர்க்கு மகளைக் கொடுத்தலும் அவர்பால் மகட்கோடலும் எல்லாருந் துணிந்து செய்குவ ராயின், மனைவிக்கேற்ற கணவனும், கணவர்கேற்ற மனைவியும் வாய்ப்பர். அதனால், இல்லற வாழ்க்கை உயர்ந்த தூய இன்பவாழ்க்கையாம். இப்போதுள்ள துன்பங்களும், மணமக்களை விலைகொடுத்து வாங்குதலும் ஒழியும். மகளிரது கற்பொழுக்கமும் எவருஞ் சொல்ல வேண்டாமலே இனிது நிலைபெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/196&oldid=1591865" இலிருந்து மீள்விக்கப்பட்டது