பக்கம்:மறைமலையம் 29.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

முதற் பதிப்பு முகவுரை

கி.பி. 1921 ஆம் ஆண்டு மார்கழித் திங்களில் யாம் யாழ்ப்பாணத்தில் உள்ள அன்பர்களால் அழைக்கப்பட்டு, அங்கே விரிவுரை நிகழ்த்தச் சென்று, யாழ்ப்பாண நகரத்தும் அதனையடுத்துள்ள பல ஊர்களிலுஞ் சைவசித்தாந்தப் பொருள்களையுந் தமிழ்ச்சிறப்புகளையும் எடுத்துப் பல விரிவுரைகள் நிகழ்த்தினேம். அவ் விரிவுரைகளை யெல்லாம் பெருந்திரளான

அன்பர்கள் ஆங்காங்கு வந்துகேட்டு இன்புற்றனர். கடை முறையாக யாம் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்படுதற்குச் சில நாட்களின்முன், அஃதாவது கி.பி.1922 ஆம் ஆண்டு தைத்திங்கள் முதல்நாள் அன்று யாழ்ப்பாண நகரமண்டபத்தில் மாலை 6 மணிக்குத் துவங்கித் ‘தமிழர் கரிகம்' என்னும் பொருளை விரித்துப் பேசினேம். தமிழர் நாகரிகத்தின் வரலாறுகளை அவ்விரிவுரை புதுமுறை ஆராய்ச்சியால் நன்கெடுத்து விளக்கினமையால், அவற்றை ஆண்டுக் குழுமியிருந்து கேட்ட அறிவுடை அவையத்தார் எல்லாரும் அவ் விரிவுரையை மிக வியந்து பாராட்டினர். அவ் விரிவுரையின் அருமை இலங்கையிலும், யாழ்ப்பாணத்து நன்மக்கள் மிகுதியாய்ச் சென்று குடியேறி வாழும் மலாய் நாடுகளிலும் விரைந்து பரவலாயிற்று. யாழ்ப்பாணம், கந்தரோடையிலிருந்து சென்று மலாய் நாட்டில் இரெங்கான் என்னும் ஊரிற் புகைவண்டிநிலை உதவித் தலைவராய் (Assis- tant station Master) அலுவலில் அமர்ந்திருந்த திருவாளர் ந.சி. கந்தையா அவர்கள் சைவசித்தாந்த உண்மைகளையுந் தமிழின் அரும்பெருஞ் சிறப்புகளையும் நாடெங்கும் பரவச் செய்வதில் நிரம்பக் கருத்தூன்றினவர்களாதலின் 'தமிழர் நாகரிகம்' என்னும் அவ் விரிவுரையை ஒரு நூலாக அச்சிட்டு வெளியிடும்படி எம்மைக் கேட்டுக் கொண்டதோடு, செகமத் என்னும் ஊரில் அரசினர் மருத்துவ விடுதியில் (Government

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/200&oldid=1591869" இலிருந்து மீள்விக்கப்பட்டது