பக்கம்:மறைமலையம் 29.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேளாளர் நாகரிகம்

காட்டப்பட்டிருக்கின்றது.

177

ஆகவே, யாம் முன்னர் எழுதக் குறித்திருந்த 'தமிழர் நாகரிகம்' என்பதனையும் இதன்கண் விரித்து விளக்க இடம் பெற்றேம். ம் ஆரியர் இவ்விந்திய நாட்டிற் புகும் முன்னரே தமிழர் நாகரிக வாழ்க்கையில் முதிர்ச்சிபெற்று நின்று, பின்னர்த் தம்மொடு வ வந்து கலந்த அவ்வாரியரைத் திருத்தினமை இதன்கண் நன்கெடுத்துக் பழந்தமிழ் நூலாராய்ச்சியின்றி, வட நூற் பயிற்சி ஒன்றேயுடையார் ஆரியரை உயர்த்துத் தமிழரை இழித்துக் கூறுவனவெல்லாம் பொருந்தாமையுந், தமிழரே எவ்வாற்றானும் உயர்ந் தோராதலும் இவைதம்மை ஆராயாதார்க்குப் புதுமையாய்த் தோன்றினும், யாம் ஆராய்ந்து சான்றுகளோடு உரைப்பன வற்றை நடுநிலை வழாது நின்று காண்பார்க்கு எம் உரையின் மெய்ம்மை தானே விளங்குதல் திண்ணம்.

- மறைமலை அடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/202&oldid=1591871" இலிருந்து மீள்விக்கப்பட்டது