பக்கம்:மறைமலையம் 29.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மறைமலையம் - 29 -

பட்டினியும் பசியுமாயிருந்து அவர்கள் பொறுத்தற்கரிய துன்பத்திற் கழித்த நாட்களும் பல! வேட்டுவ வாழ்க்கையில் இப்போதும் நாகரிகமின்றி உயிர்வாழும் மலை வாணருங் கானவரும் நிரம்பவும் மிடிப்பட்ட நிலையிலிருத்தலை நாம் இஞ்ஞான்றும் நேரே சென்று காணலாம், இங்ஙனமாகப் பண்டைக்காலத்தில் வறுமையிற் கிடந்துழன்ற மக்களின் கொடுந் துன்பமெல்லாம், உழவு தொழிலை முதன்முதற் கண்டறிந்த அறிவுடை நன்மக்களாலேதாம் நீங்கின. தமிழ்மக்களுள் வேளாளர் உழவு தொழிலைக் கண்டறிந்த பண்டை நாட்களில், எகுபதி, சாலடி முதலான சிற்சில நாடுகளில் உறைந்த மக்கட் பகுதியினர் சிற்சிலரைத் தவிர, ஏனைப் பெரும்பாலார் எல்லாரும் உழவு தொழிலை அறியாராய் வேட்டுவ வாழ்க்கையிற் பெரிதும் வறுமைப்பட்டு வாழ்நாட் கழித்தனர். வேளாளர் உழவு தொழிலை நடாத்தி நாகரிகத்தைப் பெருக்கச் செய்த பண்டை நாளில், ஆரியர் வேட்டுவ வாழ்க்கையிலும் ஆடு மாடு மேய்க்கும் இடையர் வாழ்க்கையிலுமே இருந்தனர். அதனாலேதான், ஆரியரும் அவர் வழிப்பட்டாருஞ் செய்த நூல்களில் உழவு தொழில் இழித்துரைக்கப்பட்டிருப்பதோடு, அதனைத் தம் மினத்தவர் எவருஞ் செய்தலாகாதென்னுங் கட்டுப்பாடுங் காணப் படுகின்றது.1

L

ஆனாற், றமிழ வேளாளாரோ அவ்வுழவு தொழிலைத் தமது நுண்ணறிவாற் கண்டுணர்ந்து அதனைச் செவ்வையாகச் செய்து வந்தமையால், அத்தொழில் வேளாளர்க்கே சிறந்ததாக வைத்து வடமொழி தென்மொழியிலுள்ள நூல்களெல்லாம் ஒருமுகமாய் நின்று ஒத்துரைப்பவாயின. இவ்வாறு உழவு தொழிலை வேளாளர்கள் தோற்றுவித்து பிறகு தான் உணவுக்கும் உடைக்கும் உறைவிடத்திற்கும் மிடிப்பட்ட துன்ப வாழ்க்கை நீங்கிற்று. உணவுக்காக விலங்கினங்களைக் கால்லுங் கொலைத் தொழில் நீங்கிற்று; அளவுக்குமேல் விளைந்த நெல் துவரை முதலான பண்டங்களைத் தம்போற் பசியால் வருந்தும் ஏனைமக்கட்கும் பகுத்துக் கொடுக்கும் ஈர நெஞ்சமும் ஈகையுங் கிளைப்பவாயின; விளைந்த பண்டங் களைப் பாதுகாத்து வழங்குதற்கு அரசனும் நாடு நகரங்களுஞ் செல்வமுங் கல்வியும் இன்பவாழ்க்கையும் இறைவன் வழிபாடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/215&oldid=1591884" இலிருந்து மீள்விக்கப்பட்டது