பக்கம்:மறைமலையம் 29.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேளாளர் நாகரிகம்

193

உருத்திரங் கண்ணனார் காவிரிப் பூம்பட்டினத்தி லிருந்த பழைய வேளாளரைப் பற்றிக் கூறுகின்ற விடத்துக்,

“கொலை கடிந்துங் களவு நீக்கியும்

அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்

நல்லானொடு பகடு ஒம்பியும்

நான்மறையோர் புகழ் பரப்பியும்

பண்ணியம் அட்டியும் பசும்பதங் கொடுத்தும்

புண்ணியம் முட்டாத் தண்நிழல் வாழ்க்கைக் கொடுமேழி நசை உழவர்

நெடுநுகத்துப் பகல்போல நடுவுகின்ற நன்னெஞ்சினோர் வடு அஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்பநாடிக் கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்துவீசுந்

தொல்கொண்டித் துவன்று இருக்கை”

என்று கூறினார், கொலைகளவு நீக்கிக் கடவுளரை வணங்கியும் வேள்விகள் வேட்டும், எருது முதலியவைகளைப் பாதுகாத்தும், நான்மறை வல்ல அந்தணர்களின் புகழைப் பரப்பியும் விருந்தினர்க் குப் பல பண்டங்களைக் கொடுத்துஞ், சோறு தந்தும், நல்வினையினின்றும் பிறழாத அன்பு சுரக்கும் வாழ்க்கையினையுடைய கலப்பைத் தொழிலை விரும்பும் உழவராகிய வேளாளர் நடுவுநிலையில் நிற்கின்ற சிறந்த உள்ளத்தினராய்ப் பழியை அஞ்சி உண்மையே பேசித் தம்முடைய பண்டங்களையும் பிறருடைய பண்டங்களையும் ஒப்பாகப் பார்த்துத் தாம் பிறர் பொருள்களை கொள்ளுங்கால் விலைக்கு மேல் அப் பொருள்களை மிக அளந்து வாங்காமலும், தம் பொருள்களைப் பிறர்க்கு விலைப் படுத்துங்கால் அவர் கொடுக்கும் விலைக்கு அவற்றைக் குறைய அளந்து கொடாமலும் ஊதியத்தை வெளிப்படையாகச் சொல்லி விற்பவர் என்பது இப்பகுதியால் நன்கு விளங்குகின்றது. இதனால், உழவு ழவுதொழிலும், அவ்வுழவு தொழிலாற் பெற்ற நெல் துவரை முதலான பல் பண்டங்களை விலைப்படுத்தும் வாணிக

கு

விலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/218&oldid=1591887" இலிருந்து மீள்விக்கப்பட்டது