பக்கம்:மறைமலையம் 29.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

195

வேளாளர்களைத் தாமுந் தாழ்த்துதற் பொருட்டு அவரைச் ‘சூத்திரர்' என்று வழங்கலாயினர்; அவரை மட்டுமோ! அவ் வேளாளரினின்று பிரிந்த ‘ஆதிசைவ அந்தண' ரையுங் கூடச் சூத்திரரெனக் கூறி வருகின்றார்கள்!

அரசாண்டவனுங்,

னி, வேளாளர் ஓதுதற்குங் கடவுள் வழிபாடு ஆற்றுதற்கும் தம்மினின்று ஓர் அந்தணக் குடியை வகுத்து வைத்தவாறு போலவே, போர் செய்தற்குரிய ஆற்றலுங் குடிகளைப் பாதுகாத்தற்குரிய அறிவு வலியுமுடைய வேளாண்மக்களைப் பிரித்து அரசாளுதற்கு வைத்தார்கள். பண்டைநாளில் மிழலைக் கூற்றத்தை காடை கொடுப்பதிற் சிறந்தவனுமான வேள்எவ்வி என்னும் மன்னன் வேளாண் வகுப்பினனே யாவன், கடையெழு வள்ளல்களில் ஒருவனும், முந்நூறு ஊரையுடைய பறம்பு நாட்டிற்கும் பறம்பு மலைக்கும் அரசனுஞ், சைவசமயாசிரியருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாராலே “கொடுக்கிலாதானைப் பாரியேயென்று கூறினுங் கொடுப்பாரிலை” என்று பாராட்டி யருளிச் செய்யப்பட்டவனு மாகிய வேள்பாரி என்னும் மன்னனும் வேளாள வகுப்பினனே யாவன்; துவரையை அரசாண்டவனுஞ், சிறந்த கொடையாளியும் ஆகிய இருங்கோவேள் என்னும் அரசனும் வேளாள வகுப்பினனே யாவன். ஒருகாற் குமரிமுதல் இமயம் வரை ஒருமொழி வைத்து உலகாண்ட வேந்தர்பெருமானாகிய சோழன் கரிகாற் பருவளத்தான், நாங்கூர்வேள் என்னும் வேளாண் தலைவனிடத்துப் பெண் கொண்டமை யானும், இக் கரிகாற் க் சோழனுக்குத் தந்தையாகிய உருவப்பஃறேர் இளஞ்சேட் சன்னி என்னும் மன்னர் பிரான் அழுந்தூர்வேள் என்னும் வேளாண் தலைவன்பால் மகட் காண்ட மையானும் பண்டைநாளிலிருந்து சிறந்த சோழ அரசர்களும் வேளாள வகுப்பினரேயாதல் நன்கு தெளியப்படும். இன்னும் பழைய நாளில் அரசாண் வேளாள அரசர்களை யெல்லாம் எடுத்துரைக்கப்புகின் இது மிக விரியுமென அஞ்சி, அவருட் சிலரையே ஈண்டு எடுத்துக் கூறினாம்.

னி, வேளாளர் தமது உழவு தொழிலால் விளைவித்த பொருள்களை அறவோர்க்குக் கொடுத்தும் அவற்றால் அந்தணரைப் பாதுகாத்தும், அவை தம்மைத் துறவோர்க்கு எதிர்சென்று வழங்கியும், விருந்தினரை ஏற்று அவர்க்கு அருத்தியும், அவ் வாற்றானெல்லாங் குறைபடாமல் மிகுந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/220&oldid=1591889" இலிருந்து மீள்விக்கப்பட்டது