பக்கம்:மறைமலையம் 29.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் -29 -

பண்டங்களை ங்களை விலைப்படுத்தும் பொருட்டு, அத் தொழில் செய்தற்கேற்ற கணக்கறிவும் இன்சொல்லும் இயற்கையே வாய்ந்தாராய் உள்ள தம்மினத்தவரில் ஒரு சாராரைப்பிரித்து அவரை வணிகராக நிறுத்துவாராயினர்.

ங்ஙனம்

நிறுத்தப்பட்ட வணிக வேளாளரே தொன்றுதொட்டு இன்று காறுங் கொலைபுலை முதலியன தவிர்ந்த அறவொழுக்கத் தினராய் 'வேளாண் செட்டிகள்' என்று பெயர்பெற்று வருகின்றனர்.

இனிக்,கொலைபுலை நீக்கமாட்டாராய் அறவொழுக்கத்திற் றாழ்ந்து நிற்போரான மற்றைத் தமிழ்க் குடிகளைத் தமது உழவு தொழிலுக்குந் தமக்கும் உதவியாகும் பல கைத்தொழில் களைப் புரியும்படி ஏவி, அவர்களைப் பதினெண் வகுப்பினராகப் பிரித்து வைத்தவர்களும் வேளாளர்களேயாவர். அப் பதினெண் வகுப்பினராவார்; கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பார், பாகர், பறையர் என்பவரேயாவர். இப் பதினெண் வகுப்பினருந் தத்தமக்குரிய தொழில்களைச் செய்துகொண்டு வேளாளர் ஏவல்வழி நின்று அவர்க்கும் அவரது உழவு தொழிலுக்கும் பயன்படுவாராயிருந்து வாழ்ந்துவருதலைத் தமிழ்நாட்டிலுள்ள வேளாள நத்தங்களில் இன்றும் நேரே காணலாம்.

இங்ஙனமாகத் தமிழகத்தில் முதன் முதல் உழவு தொழிலைக் காணும் நுண்ணறிவும், அதனாற் கொலை புலை தவிர்ந்த அறவொழுக்கமும், அதனாற் பெற்ற நாகரிகமும் உடைய வேளாளரே தமிழ்மக்கள் எல்லாரினுஞ் சிறந்து விளங்கித், தம்மினின்று அந்தணர் அரசர் என்னும் உயர்ந்த வகுப்பினர் இருவரையும் அமைத்துவைத்து, அறவொழுக்கத்தின் வழுவிய ஏனைத் தமிழ்மக்களெல்லாந் தமக்குந் தமதுழவுக்கும் உதவியாம் படி பதினெண் டொழில்களைச் செய்யுமாறு அவர்களை அவற்றின்கண் நிலைபெறுத்தித் தமிழ் நாகரிகத்தைப் பண்டு தொட்டு வளர்த்து வரலானார்கள். மக்களின் தோற்றத்தையும் நாகரிகத்தையும் பெரிதும் வியக்கத்தக்கவாறாய் ஆராய்ந் தறியும் ஆங்கில நூலாசிரியர்களும் ‘முதன் முதல் உழவு தொழிலைக் கண்டறிந்த மக்களிலிருந்தே நாகரிகந் தோன்றி வளர்ந்து வரலாயிற்று' என்று இவ்வுண்மையைப் புலப்படுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/221&oldid=1591890" இலிருந்து மீள்விக்கப்பட்டது