பக்கம்:மறைமலையம் 29.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் - 29

மனு முதலான பழைய ஆரிய நூல்களின்படி ஆராய்ந்து பார்த்தாலும் வேளாளரைச் சூத்திரர் என்று சொல்வதற்கு ஒரு சிறிதம் இடமேயில்லை. மனு தர்மநூலின் ஒன்பதாம்

அத்தியாயத்தின் இறுதியில்,

“வைசியன் மறைநூல் ஓதியபின் திருமணஞ் செய்து காண்டு ஆவைக்காத்தலும், உழவுதொழில் நடாத்தலுமாகிய முயற்சியினை மேற்கொண்டவனாயிருக்கவேண்டும்.

66

'நான்முகன் ஆனிரைகளைப் படைத்து அவற்றைக் காக்கும் பொருட்டு வைசியனிடத்துங், குடிமக்களைப் படைத்து அவர்களை இம்மை மறுமையிற் காக்கும் பொருட்டுச் சத்திரிய பிராமணரிடத்தும் ஒப்புவித்தான்.'

“நாம் ஆக்களைக்காத்தல் வேண்டாமென்று வைசியன் நினைத்தல் ஆகாது. அவன் காக்கும்போது வேறெந்தச் சாதியானும் ஆக்களைக் காத்தல் கூடாது.

66

"முத்து மணி பவளம் உலோகம் ஆடை கருப்புரம் முதலிய நறுமணப் பண்டம் உப்பு முதலிய சுவைப்பண்டம் இவைகளுக்கு அவ்வந் நாடுகளில் உள்ள விலையில் ஏற்றக் குறைச்சல்களையுஞ் சரக்குகளின் நன்மை தீமைகளையும் வைசியன் அறிதல் வேண்டும்.

66 தருமமாக வியாபாரஞ்செய்து பொருளைப் பெருக்குதற்கு முயலல்வேண்டும். மற்ற தானங்களைவிட எல்லா உயிர்களுக்குங் கட்டாயமாக அன்னதானஞ் செய்தல் வேண்டும்.

“என்று வைசியனுக் குரிய ஒழுகலாறுகள் வரையறுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. இதனையடுத்துச் சூத்திர தருமத்தைக்

கூறுங்கால்,

"வேதநூல் ஓதியுணர்ந்து புகழ்பெற்ற இல்லறத்தானாகிய பிராமணனுக்கு ஊழியஞ் செய்வதே சூத்திரனுக்கு வீடு பேற்றை அடைவிக்கும் மேலான அறமாகும்.

66

உள்ளும் புறம்புந் தூயன் ஆகிய உயர்ந்த சாதியானைக் கொடுமையாகப் பேசாமல், பிராமணனுக்கும், அவனில்லா விடின் சத்திரியனுக்கும், அவனில்லாவிடின் வைசியனுக்கும் மேலான பணிவிடை செய்து கொண்டு செருக்கில்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/225&oldid=1591894" இலிருந்து மீள்விக்கப்பட்டது