பக்கம்:மறைமலையம் 29.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

3. ஆரியர் வேளாளரைத்

தாழ்த்தச் செய்த சூழ்ச்சி

இனிக், குடியேறிப் பிழைக்கவந்த ஆரியப் பார்ப்பனரை அன்பாக வரவேற்று, அவர் இருக்க இடங்கொடுத்தும், அவர் உண்ணச் சோறும் உடுக்கக் கூறையும் வழங்கியும், நூல் கற்க உதவிகள் புரிந்தும் அவர்க்குப் பலவாற்றான் நன்றிசெய்து அவரைப் பாதுகாத்த தமிழ் நன்மக்களாகிய வேளாளர்க்குத் திரும்ப நன்றி செய்தற்கு மாறாகத் தீட்டின மரத்திற் கூர் பார்த்தலோடு ஒப்ப, அவ்வாரியப் பார்ப்பனர் அவரை மிகவுந் தாழ்த்துதற்குக் கங்கணங் கட்டிக்கொண்டு,நேரம் வாய்க்கும் போதெல்லாம் அவரைச் சூத்திரரென வாய்கூசாது சொல்லு தற்குஞ், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திற்குப் பிற்பட்ட தமிழ்நூல் வடநூல்களில் அங்ஙனமே அவரைச் சூத்திரரென எழுதிக் கரவாய்ச் சேர்த்து விடுதற்குந் துணிந்து வரலானார். இப் பிற்பட்ட காலத்தில் எழுந்த துலுக்கர் அரசாட்சியால் நேர்ந்த பல குழப்பங்களில் அகப்பட்டு வேளாளரிற் கல்வி கற்பார் தொகை மிகச் சுருங்கிப்போகவே, ஆரியப் பார்ப்பனர் இழித்துக் கூறுஞ் சூத்திரர் என்னுஞ் சொல்லுக்குப் பொருள் தெரியாமல், அவ் வேளாளர் தாமும் அச்சொல்லைத் தமக்கு உரியதெனக் கொண்டு அச்சொல்லால் தம்மைத் தாமும் வழங்கிக் கொள்வாரானார்கள். இங்ஙனமே, இஞ்ஞான்றை இந்து சமயத்தவர் பலருந் தம்மை ‘அஞ்ஞானிகள்' என்று கிறித்துவ மதத்தினர் இகழ்ந்து கூறும் பெயரைத் தமக்கு ஓர் அணிகலனாக ஏற்றுக்கொண்டு, 'அஞ்ஞானிகள்' என்னும் அப்பெயரி னாலேயே தம்மைத் தாம் சொல்லிக் கொள்கின்றனர்! ஐயோ! அறியாமையின் பெருமிதம் இருந்தவாறென்னை!

இப் பிற்பட்ட காலத்தில் தோன்றிய புராணங்கள் பலவற்றிலும் ஆகமங்களிலும் பிற நூல்களிலும் ஆரியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/227&oldid=1591896" இலிருந்து மீள்விக்கப்பட்டது