பக்கம்:மறைமலையம் 29.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

-

மறைமலையம் 29

6

தூண்டிவிட்டு, அவ்வாற்றால் அவர்கள் வேளாளரைத் தம்மிற் றாழ்ந்த சூத்திரரெனச் சொல்லி அவர்களோடு மாறாடி நிற்கும்படி செய்துவிட்டு, அவ்வாரியப் பார்ப்பனராகிய தாம் அவரெல்லாரினும் உயர்ந்தாராகத் தனி நின்று கொண்டு, அவரிடும் போரினைக் கண்குளிரக் கண்டு மகிழ்கின்றார்கள்! இவர் செய்த இப்பொல்லாத சூழ்ச்சியால், தமிழ்நாடடில் முன்னே ஒருவர்க்கொருவர் உதவியாய் ஒற்றுமை கொண்டு உறவாடி அமைதியாய் வாழ்ந்த குடிமக்களெல்லாரும் ப்போது பல்லாயிரம் பிரிவினராய்ப் பிரிந்து ஒற்றுமையிழந்து பகைமை மேற்கொண்டு, தமக்குரியவல்லாத சத்திரியர் வைசியர் என்னும் ஆரியப் பெயர்களைத் தாமாகவே புனைந்தனராய் மல்லாடி நாட்டின் நலத்தைக் கெடுக்கின்றனர்! “ஊர் இரண்டுபட்டாற் கூத்தாடிக்கு இலக்கரம் என்னும் பழமொழிக்கு இணங்க ஆரியப் பார்ப்பனர் பழந் தமிழ் மக்களைத் தம்முட் போராடவிட்டு, அவரெல்லார்க்குந் தாம் மேலானவர்போல் தனி நின்று அவருடைய நலங்களை யெல்லாந் தாம் கைப்பற்றி வருகின்றனர்! இனியேனும், இத் தென்றமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்கள் தம் பழைய வழக்க ஒழுக்கங்களைப் பண்டைத் தனித்தமிழ் நூல்களின் உதவி கொண்டு ஆராய்ந்து தெளிந்து, தாம் சிக்கிக்கொண்ட ஆரியர் வலையினின்றுந் தம்மை விடுவித்துத், தம்மை உண்மையாக, உயர்த்துதற்குரிய தமிழ் முறையால் தம்மை உயர்த்தி ஒருமித்து வாழ்வதிற் கருத்தாய் விரைந்து முயலல்வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/229&oldid=1591898" இலிருந்து மீள்விக்கப்பட்டது