பக்கம்:மறைமலையம் 29.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

4. அருளும் அன்பும் உடையாரே

உயர்ந்தசாதியார்

தம்மை உயர்த்துதற்குரிய தமிழ்முறையாதென்றால் அஃது அறிவும் அன்பும் அருளும் உடைய ஒழுக்கமேயாகும். எந்த உயிர்க்குந் தீங்கு செய்யாத அருளொழுக்கமே எல்லா ஒழுகலாற்றினுஞ் சிறந்ததாய்த் தன்னை யுடையார்க்கு எல்லா உயிர்வினையுந் தரும். இது,

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்’

என்னுந் தெய்வத் திருவள்ளுவர் திருக்குறளால் நன்கு விளங்கும். எந்த உயிரையுங் கொல்லுதலும் ஆகாது. கொன்று அதன் ஊனைத் தின்னுதலும் ஆகாது.

66

“தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?"

என்று ஆசிரியர் திருவள்ளுவர் கேட்டலாற், கொலையும் புலையும் நீக்காதார் அருளுடையவர் ஆகார். ஆரியர் எண்ணிறந்த யாடு மாடு குதிரை முதலிய உயிர்களை வேள்விவேட்கின்றே மென்று சொல்லிக் கொண்டு கொன்று தின்றமையால் அவர் அருளுடையராகார்; அதனால் அவர் உயர்ந்தோராதலும் இல்லை. ஆதலால், அவரைப் பின்பற்றி, அவர் கூறிய பெயர் களால் தம்மைச் 'சத்திரியர்' எனவும் ‘வைசியர்’ எனவுஞ் சொல்லிக்கொண்டு உயர்வு தேடுதலால், ஒருவர்க்கு உயர்வு வந்துவிடமாட்டாது. கொலையும் புலாலுணவும் நீக்கி அருளொழுக்கத்தில் வந்து நிலைபெற்றால் மட்டும் ஒருவர் வேளாளரைப்போல் உயர்ந்தவராகலாம். இப்போது தம்மைச் சத்திரியர் எனவும் வைசியர் எனவுங் கூறித் தமக்குப் பெருமை

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/230&oldid=1591899" இலிருந்து மீள்விக்கப்பட்டது