பக்கம்:மறைமலையம் 29.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் 29 -

தேடுந் தமிழ்க் குடிமக்கள், வேளாளரைப் போற் கொலைபுலை நீக்கித் தூய அருளொழுக்கத்தினராய் நடக்கின்றார்களா வென்றால் அதுவுமில்லை. வேளாளர்களோ பண்டைக்காலந் தொட்டே தமது நுண்ணறிவால் நிலத்தை உழுது பயிர்செய்து பல உயர்ந்த சுவைப் பண்டங்களை விளக்கத் தெரிந்து, அவற்றை உணவாக அருந்தி மற்றை உயிர்களைக்கொல்லாமலும் அவற்றின் ஊனைத் தின்னாமலும் அருளொழுக்கத்தின் கண்ணராய், ன்று காறும் ஏனைஎல்லா மக்களானும் உயர்த்துக் கொண்டாடப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இயற்கையில் உயர்ந்தோராய் நிற்கும் நன்மக்களை வறிதே சூத்திரர்’ என்று சொல்லி விட்டால் ல் அவ்வளவில் அவர்களைத் தாழ்த்திவிடுதல் கூடுமோ? கொலைபுலையாகிய ழிந்தவற்றைச் செய்யும் ஏனை வகுப்பினர் தம்மைப் பிராமணர் சத்திரியர்’ 'வைசியர்’ என்று வாளா கூறிக்கொண்டால் அவ்வளவில் அவர் உயர்ந்தாராய் விடுதல் கூடுமோ? இரண்டுமில்லை. இது பற்றியன்றோ தெய்வத் திருவள்ளுவர்

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்”

என்று அருளிச் செய்தாரென்க

னி, மக்களாய்ப் பிறந்தோர் தம்மையொத்த எல்லார்க்கும் பசியும் நோயும் வறுமையும் உண்டென்பதனை உணர்ந்து, அவர்பால் இரக்கமும் அன்பும் மீதூரப் பெற்றாராய் அவர்க்குச் சோறு தந்து பசியை நீக்கியும், மருந்து ஊட்டி நோயைத் தீர்த்தும், பொருள் வழங்கி வறுமையைக் களைந்தும் ஒழுகுவதோடு, அவர் இம்மை மறுமைப் பயன்களை எய்துதற்கு ன்றியமையாத கல்வியறிவைம் தந்து நடத்தல்வேண்டும். இதுவே அன்பொழுக்கமாம். இவ்வொழுக்கம் ஆரியப் பார்ப்பனர்பால் இல்லையென்பதை எவரும் உணர்வர். தம் இனத்தவரல்லாத பிறர் எவரேனும் பசியாலும் விடாயாலும் மிக வருந்தி வந்து ஒரு பிடி சோறும் ஒரு குடங்கை நீருங் கேட்டாலுந் தீட்டுப்பட்டுப்போம் என்று சொல்லி அவற்றைக் கொடாமல் அவரைத் துரத்துவர்; தாம் நீர் முகக்குங் கிணற்றில் பிறர் நீர் எடுக்கவும் விடார்; தாம் குளிக்கும் நீர்த் துறையிற் பிறர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/231&oldid=1591900" இலிருந்து மீள்விக்கப்பட்டது