பக்கம்:மறைமலையம் 29.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

207

இவர்

இறங்குதற்கும் ஒருப்படார்; தமது வீட்டுத் திண்ணையிற் பிறர் களைத்திருக்கவும் இடங்கொடார்; பழந்தமிழ்க் குடிகளாகிய பறையர் பள்ளர் தம் தெருவண்டை நெருங்குதற்கும் மனம் ஒப்பார். நல்ல நிலைமையிற் சிறிது உதவி வேண்டினார்க்கே அதனைச் செய்யாத ஆரியப் பார்ப்பனர் நோயும் வறுமையுங் கொண்டு தமது நிலைமை கெட்ட ஏனையோரைத் திரும்பியும் பார்ப்பரோ! நடுநிலைவுடையீர் கூறுமின்கள்! இனி, தாங்கற்ற கல்வியைத் தம்மினத்தவர் அல்லாத பிறரெவர்க்குங் கற்றுக் கொடார்; தம்மினத்தவர் மட்டுமே வீட்டு நெறி யெய்துதற்குரியராதலால், ஏனையோர் அவ் வீட்டு நூல்களைக் கற்கலாகா தென்பர். தாமோதும் வீட்டு நூல்களைப் பிறர் ஓதின் அவர் நாவைப் பிளக்க வேண்டு மெனவும், அவற்றைக் கேட்பிற் காய்ச்சி உருகின ஈயத்தை அவரது செவியில் உகுத்தல் வேண்டுமெனவுங் கூறுவர். இவையெல்லாம் அவர்களெழுதி வைத்த மனு முதலான மிருதி நூல்களிற் பரக்கக் காணலாம். இவ்வாரியப் பார்ப்பனவர்க்குப் பிறர்மாட்டு ஆ! எவ்வளவு இரக்கம்!

இனித், தமிழ் நன்மக்களான வேளாளர்களோவென்றால் எல்லா மாந்தரிடத்தும் அன்பும் இரக்கமும் உடையராய்ப், பசித்து வருந்தினார்க்கு அப் பசியைத் தீர்த்தற்கு அறச்சோற்று விடுதிகளும், நீர்விடாய் தணித்தற்கு அறக்கூவல் குளங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் இளமரக்காக்களும், வழிப்போவார் தங்குதற்குச் சத்திரஞ் சாவடிகளும், நோயுற்று வருந்தினார்க்கு நோய் தீர்க்கும் மருந்து விடுதிகளுங், கல்வி கற்பிக்குங் கல்விக்

கழகங்கள் திருமடங்களும், கட வுளை வழிபடுதற்குத்

திருக்கோயில்களும் பண்டுதொட்டு ஆங்காங்கமைத்துப் பல்வகை அறங்களுஞ் செய்திருக்கின்றனர். அவை மட்டுமோ, பொருளின்றித் தம்பால் வந்த புலவர்க்குந் துறவோர்க்கும் மழையைப்போற் கொடை கொடுத்து, அவர் தம்மால் உலகிற்குப் பல நலங்களை விளைவித்திருக்கின்றனர். வேளாளர் இங்ஙனம் பல்வகை அறங்களைச் செய்துவைக்க, அவற்றை இன்றுவரையில் துய்ப்பவர்கள் மட்டும் பெரும்பாலும் ஆரியப் பார்ப்பனராயிருத்தலை அறியாதார் யார்?

ஆரியப் பார்ப்பனர் தம்மினத்தவர்

அல்லாத வேறொருவர் தமக்கு நண்பராதல் பற்றித் தம் வீட்டிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/232&oldid=1591901" இலிருந்து மீள்விக்கப்பட்டது