பக்கம்:மறைமலையம் 29.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

-

மறைமலையம் - 29

விருந்தினராய் வந்தால் அவர் எவ்வளவு பசியோடிருந்து முகங்குழைந்தாராயினும் அவரைப் புறத்திண்ணையில் இருக்கச் செய்து, வாயிற் கதவை அடைத்துக் கொண்டு தாமுந் தம்மினத்தவரும் உள்ளேயிருந்து நன்றாய் விலாப்புடைக்க மெல்லத் தின்று முடித்தபின் மிஞ்சியதைப் பசித்துப் பாதி உயிர்போன அவ் விருந்தினர்க்கு வாயிற் கதவண்டை நடையில் வைத்து இடுதலும், அவர் எச்சிற் சோற்றை மனவருத்தத் தோடும் அரைகுறையாய் உண்டபின் அவரே தாம் உணவுகொண்ட எச்சிற்கல்லையைக் கையில் தூக்கிக் கொண்டு தெருவே செல்ல, அவர்க்குச் சோறிட்ட அப்பார்ப்பனரின் மகளிர் அவர் பின்னே சாணத்தைக் கரைத்துத் தெளித்துக்கொண்டு வருதலும் இன்று காறும் நடக்கக் காணலாம். வேறினத்தவர் எவராயிருப்பினும் அவர் தம்மைச் சத்திரியரெனக் கூறிக்கொள்பவராயினும் வைசியரெனக் கூறிக்கொள்பவராயினும் அன்றித் தம்மையும் பிராமணரெனவே கருதிக் கூறுபவராயினும் அல்லது தம்மைச் சூத்திரரெனவே ஒப்புக்கொண்டவராயினும், அவரெல்லாம் ஆரியப் பார்ப்பனர் தமக்கு ஆருயிர் நேசராதல் பற்றி அவர் வீட்டுக்குத் தப்பித் தவறி விருந்தினராய்ச் சென்றால், அவர்கட்கு அங்கே இவ்வளவு பெருஞ் சிறப்பும் நடக்கின்றது! வெட்கங் கெட்ட இவ் வெச்சிற் சோற்றைத் தின்னுதற்குத் தமிழரில் மானமுடையோர் எவரும் இவ் வாரியப் பார்பப்னர் வீட்டுக்குச் செல்வரோ?

இனி, வேளாளரோவென்றால்எ வேளாளர் நாகரிகம் எ

“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று"

என்று ஒப்புயர்வற்ற தமிழ்மறை கூறுகின்றபடி, வந்த விருந்தினரைப் புறத்தே பசித்திருக்க விட்டுத், தாமும் தம்மினத்தவருமாக உள்ளே கதவடைத்துக் கொண்டு உண்ணும் நீரர் அல்லர்; வந்த விருந்தினர், தம்மோடு உடனிருந்து உண்ணுதற்கு ஏற்ற சைவ வாழுக்கம் இல்லாதவராயிருப்பின் அவரை முன்ஊட்டிப் பின் தாம் உண்பர்; அல்லது அவரை ஒரு பக்கத்து வைத்துத் தாம் ஒரு பக்கத்திருந்து, அவருந் தாமும் ஒரே காலத்தில் உணவு

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/233&oldid=1591902" இலிருந்து மீள்விக்கப்பட்டது