பக்கம்:மறைமலையம் 29.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

-

மறைமலையம் - 29

என்னுந் தெய்வமறையின் உண்மையைக் கடைப்பிடித்து வேளாளராவர் பண்டைக் காலந்தொட்டு வருந் தமக்குரிய அருளொழுக்கத்தினின்றுஞ் சிறிதும் வழுவாது ஒழுகுதலே அவர்க்கு என்றும் மங்காத பெருமையையும் இறைவனருட் பேற்றையுந் தரும் என்க. தொன்றுதொட்டு வருந் தமது அருளொழுக்கப் பெருமையைக் கற்றும் கேட்டும் ஆய்ந்தறியாத அறியாமையுடைய வேளாளரிற் சிலர் ஆரியப் பார்ப்பனரைப் பார்த்து அவர்போல் அருளொழுக்கத்தில் வழுவி நடப்பராயினும், அங்ஙனம் அருளிலாராய் நடப்பது அவர்க்கு இயற்கை யன்றென்பது, அவர்கள் திருவிழாக் காலங்களிலும் ஏனைச் சிறப்பு நாட்களிலும் எல்லா வகுப்பினரையும் வேற்றுமையின்றி ஒருங்கு வைத்த உடனிருந்து உணவு கொள்ளுதலாகிய 'மகேசுர பூசை ச’ நடத்துமாற்றால்

நன்கறியப்படும் அதுநிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/235&oldid=1591904" இலிருந்து மீள்விக்கப்பட்டது