பக்கம்:மறைமலையம் 29.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் 29

-

வயிற்றுப்பிழைப்புக்கே யன்றிப் பிறிதன்றென்பது நன்கு

புலப்படும்.

துமட்டுமோ, தமிழ் நாட்டிற் பிறந்தருளி முழுமுதற் கடவுளின் உண்மையை நாட்டியருளின திருஞானசம்பந்தர் முதலான சைவ சமயாசிரியரில் மூவர் அந்தணர்களாயிருந்தும் அவர்களையுஞ் சூத்திரர் எனக்கூறி, அவர்கள் அருளிச் செய்த நூல்களைச் சூத்திரப் பண்டாரப் பாட்டென்று இகழ்ந்து, சைவவேளாளர் மிகுதியாயுள்ள திருநெல்வேலி முதலான ஊர்களிலுங்கூடச், சிவபிரான் திருக்கோவில்களில் ஓதுவார் பாடும் இத்தேவார திருவாசகங்களைத் தாம் செவிகொடுத்துக் கேட்டாற் பார்ப்பனராகிய தமக்குத் தீட்டாம் என்று கருதி, ஓதுவார் அவற்றைப் பாடத்தொடங்கும் முன்னரே நம்பியாரிடந் திருநீறு பெற்றுக்கொண்டு அவ்வாரியப் பார்ப்பனர் கோயிலை விட்டு அகன்று போதலை இன்றும் பார்க்கலாம். தமிழராற் கட்டிவைக்கப்பட்டுத், தமிழராற் பெரிதும் போற்றி வழிபாடு செய்யப்பட்டுவருந் தமிழ்த்தெய்வமாகிய சிவபெருமான்

உறையுங் கோயில்களிலே, முழுமுதற்கடவுளாகிய அச் சிவபிரான் திருவுருவத்தின் எதிரிலே, ஆரியப் பார்ப்பனர் தாம் வணங்கிப் போந்த இந்திரன் வருணன் அசுவினி முதலான சிறுதேவர்கள்மேல் தம் முன்னோர்கள் பாடிவைத்த ஆரிய வேதங்களை முதலில் ஓதும்படி, அவ் வேதங்களின் சி றுமையுணராத தமிழர்களை ஏமாற்றி ஏற்பாடு செய்து விட்டது மல்லாமற், சிவபிரான் ஒருவனையே வழுத்துந் தேவார திருவாசகங்களை முதலில் ஓதாதபடிக்குஞ் சூழ்ச்சிசெய்து விட்டார்கள்! இதனினும் வேளாளரை இழிவுபடுத்தத் தக்கது வேறு எதுவேண்டும்!

இதுமட்டுமோ,தமிழ்நாட்டிலிருந்து செயற்கருஞ்செயல்கள் புரிந்து உண்மையன்பாற் சிவபிரான் திருவடிதலைக்கூடிய சைவத்திருத் தொண்டர் வரலாறுகளை இவ்வாரியப் பார்ப்பனர் இகழ்ந்து ஒதுக்கி, வடநாட்டிற் பிறந்து சிறு தெய்வங்களை வணங்கிப் போன தாசர்களின் வரலாறு களையே எந்நேரமும் விரும்பிக் கற்றுக் கொண்டாடுவர்! இவர்கள் சிவபிரான் கோயில்கட்குச் செல்லுதல் தமிழராற் பாராட்டப் படுதற்குந், தம் ஆரிய முறைகளை ஆண்டு நுழைத்தற்குமேயாம். இவர்கள் கடவுள் ஒருவன் உண்டெனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/237&oldid=1591908" இலிருந்து மீள்விக்கப்பட்டது