பக்கம்:மறைமலையம் 29.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

213

கொள்ளாமல் தம்மையே கடவுளாகக் கருதும் நாத்திகர் என்பதற்கு, இவர்கட்கே உண்மையாக உரிய மீமாஞ்சைநூல் கடவுள் இல்லையென மறுப்பதனாலுஞ் சங்கராசிரியர் 'நானே கடவுள்' என நாட்டிய மாயவாத வேதாந்த கொள்கையையே இவர்கள் அனைவருங் கைக்கொண்டு நடத்தலாலும் நன்கு துணியப்படும். இன்னும் இங்ஙனமே இவ்வாரியப் பார்ப்பனர் தமிழையுந் தமிழ் நூல்களையுந் தமிழரையுந் தமிழ்ப் பெரியாரையுந் தமிழ்த் தெய்வத்தையுந் தாழ்வுபடுத்திவருஞ் சூழ்ச்சிகளையெல்லாம் ஈண்டுரைக்கப்புகின் இது மிகவிரியும். பொதுவாய்த் தமிழ்த்தொடர்புடைய எதனையும் இகழ்ந் தொதுக்குதலே இவர் தங் கடப்பாடு. தாம் அங்ஙனம் துக்குதற்கு ஏலாமல் ஏற்பதற்குரிய மிகச் சிறந்தது ஏதேனும் ஒன்றைத் தமிழிற் கண்டால் உடனே அஃது ஆரியராகிய தம்மவரிடமிருந்து வந்ததென நாட்டுதற்குத் தக்க ஏற்பாடுகளை யெல்லாம் இவர்திறம் இவ்வாறிருக்க.

எப்படியோசெய்துவைப்பர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/238&oldid=1591910" இலிருந்து மீள்விக்கப்பட்டது