பக்கம்:மறைமலையம் 29.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

215

வடமொழிநூல்களிற் பேசியிருக்கின்றனரா? இல்லையே, இதனாலேயே, தமிழர் அருளாளராதலும், அழுக்காறுடையராதலும் நன்கு விளங்கும்.

ஆரியர்

இன்னுந், தமிழர் வாய்மையே கூறும் இயல்பின ரென்பதற்கும், ஆரியர் பொய்யும் புளுகும் புனைந்து கட்டிச் சால்லித் தம்மை உயர்த்தும் நீரர் என்பதற்கும் அவரவர் தத்தம் நூல்களைப் பற்றிக் கூறுவனவேசான்றாம். அளக்கலாகாப் பெருமையுடைய திருக்குறள், நாலடியார், தேவார திருவாசகங்கள் முதலிய நூல்களையெல்லாந் தமிழ் மக்கள் அவ்வவற்றை இயற்றிய சான்றோர் பெயர்களால் உண்மையை உள்ளவாறே சொல்லி வழங்குவர். ஆரியரோ மேற்கூரிய தமிழ்நூல்களின் அரும்பொருள்களில் நூறாயிரத்து ஒன்றுகூட இல்லாமற், பெரும்பாலுஞ் சிறு தெய்வங்கள்மேற் சிறப்பில்லாத வகையாகத் தம்மவராற் பாடப்பட்ட இருக்கு முதலான வேதங்களையும், அருளறத்திற்கு ஒவ்வாத முறைகளைக் கூறும் மிருதிகளையுங், கடவுளின் இறைமைத் தன்மைக்கு இழுக்கந்தேடும் பொய்க்கதைகள் மிக நிரம்பிய புராணங்களையும் எல்லாங் கடவுள் அருளிச் செய்தனாகப் பொய்கூறி, அவற்றின்கண் எல்லாம் ஆரியராகிய தாம் தேவர்களாகப் பேசப்பட்டிருத்தலைக் காட்டித் தம்மை உயர்த்திச் செருக்குவர். இன்னும் ஆரியர் தமது மொழியில்தாம் உயர்வாகக் கொள்ளும் நூல்களிற் காணப்படாமல் தமிழில் உயர்ந்தனவாகக் காணப்படுவனவற்றைக் கைக்கொள்ளாதும் அவற்றாற் பயன்பெறாதும் போதலைக் கண்டு இரங்கிய பிற்காலத்துத் தமிழறிஞர் தாம் எழுதுந் தமிழ்த் தலபுராணங் களையும் பிறவற்றையும் அவர் கைக்கொண்டு பயன்பெறல் வேண்டித் தாம் அவற்றை வடநூல்களிலிருந்து மொழி பெயர்த்துச் செய்யதாகவுங் கூறித் தம்மை வெறுத்துத்தள்ளும் அவர்களோடும் உறவு பாராட்டா நிற்பர்.

6

தமிழ் நாட்டுச் சைவசித்தாந்தத் திருமடங்களுக்குத் தலைவரும் ஆசிரியருமாய் இருக்குந் தமிழ வேளாளக் குரவர்கள் தமது சைவசித்தாந்தக் கொள்கைக்கு முற்றும் மாறான மாயாவாத வேதாந்தக் கொள்கையுடைய ஆரியப் பார்ப்பனரைக் கூட்டங் கூட்டமாகத் தம் மடங்களில் வைத்துக் கொண்டு அவர்கட்கு எல்லா வகையான உதவிகளும் புரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/240&oldid=1591914" இலிருந்து மீள்விக்கப்பட்டது