பக்கம்:மறைமலையம் 29.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் 29 -

வருதலை இஞ்ஞான்றும் பார்க்கலாம். ஆனால், ஆரியப் பார்ப்பனக் குருவான சங்கராசாரியாரோ தம் மடங்களில் வேளாளர் முதலான தமிழர் எவரையும் அணுதற்கும் விடுவ தில்லை; எவரேனுந் தமிழரை, அச் சங்கராசாரியார் கண்டு பேசும் படி நேர்ந்தால் அவரது முகத்தை நோக்கிப் பேசுதலுந் தமக்குத் தீட்டாமெனக் கருதித் தம் ஆரியப்பார்ப்பனருள் எவரது முகத்தையேனும் நோக்கிய படியாகவே பேசுவர். இன்னுந், தமிழ வேளாளர் தாம் கட்டி வைத்த பற்பல சத்திரஞ்சாவடிகள் பள்ளிக்கூடங்கள் கோயில்களில் ஆரியப் பார்ப்பனரைத் தலைவர்களாக ஏற்படுத்தி, அவ்வாற்றால் அவை தம் தமிழினத்தார்க்கும் பயன்படாவாறு செய்துவர, ஆரியப்பார்ப்பனரோ தாம் எடுப்பித்தசிற்சில சத்திரங்கள் கோயில்கள் சமஸ்கிருத பாடசாலைகளில் தமிழர் எவரையும் நெருங்கவிடாது வருதலையும் இன்று காறும் எவரும் நேரே கண்டு தெளியலாம். இங்ஙனமே, ஆரியப் பார்ப்பனர் தம்மினத்தவ ரல்லாத மற்றெவரும் முன்னேற்றம் அடைதற்குத் தினையளவும் இடங்கொடாமல் ஓரவன்னெஞ்சம் உடையராய்ச் செய்து வரும் பொல்லாத கட்டுப்பாடுகளையும், தம்மினத்தவ ரல்லாததுடன் தம்மை ஓயாது புறம்பழித்து வருவாருமான அவ்வாரியப் பார்ப்பனர்க்கும் பிறர்க்குந் தமிழ வேளாளர் ஈர மென்னெஞ்சமுடையராய்ச் செய்து வரும் அருளுதவிகளையும் ஈண்டு முற்ற வெடுத்து மொழியப் புகுந்தால் இது மிகவிரியுமென அஞ்சி இதனை இவ்வளவில் நிறுத்தி, வேறொன்று கூறத் துவங்குவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/241&oldid=1591916" இலிருந்து மீள்விக்கப்பட்டது