பக்கம்:மறைமலையம் 29.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேளாளர் நாகரிகம்

219

அரசரைச் சார்ந்து பெறுந் தண்டத்தலைமை முதலிய பொதுத் தாழிலுங் கூறி, அந்தணாளர் ஒரோ வழி அரசு செலுத்துதற்குரியராதலும் அரசர்க்குரிய வரிசைகளிற் பல குறுநில மன்னர் பெறுதற்குரியராதலுங் கூறிமுடித்தபின் ஆசிரியர்,

66

‘அன்ன ராயினும் இழிந்தோர்க்கு இல்லை”

என்னுஞ் சூத்திரம் அருளிச் செய்திருத்தலின், இச் சூத்திரத்தின் கண் ‘இழிந்தோர்' எனக் குறிப்பிக்கப்பட்டவர், வேளாளர்க்கு ஏவல் புரிவாராக வகுக்கப்பட்ட ஏனைப் பதினெண் வகுப்பினராதல் இனிது விளங்கும்.

வடமொழிக்கண் மிருதிநூல் முதலியவற்றிலும் அமர நிகண்டிலும் இப் பதினெண் வகுப்பினருஞ் ‘சூத்திரவர்க்கத்’ தின் கண் அடக்கப்பட்டிருத்தற்கேற்பவே, ஆசிரியரும் இவரை 'இழிந்தோர்' என்பர். இப் பதினெண்மருஞ் செல்வத்தான் மிக்குயர்ந்தாராயினும், அரசனாற் பெறுந் தண்டத் தலைமை அமைச்சுரிமை சிற்றரசர்க்குரிய அடையாளங்கள் முதலாயின வெல்லாம் பெறுதற்குரியர் அல்லரென்பது தொல்காப்பியனார் கருத்து. அந்தணரும் அரசரும் வேளாளரும் அல்லாத பிறரே இழிந்தோர்' என ஆசிரியராற் கொள்ளப்பட்டன ரென்பது எற்றாற் பெறுதுமெனின், உயர்ந்தோராவார் தத்தமக்குரிய கடமைகளைத் தமக்கு மேம்பாடுண்டாகுமாறு செய்து முடிக்கும் வகைமையை வாகைத்திணையுள் ஆசிரியன்,

66

'அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐவகை மரபின் அரசர் பக்கமும்

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்”

என்று

ஓதியவாற்றாற்

இதன்கண்

பெறுதுமென்பது,

மரபியலிற்’

அரசரல்லாத ‘ஏனோர்' எனப்பட்டவர்

கூறியாங்கு அரசராற் பெறும் வரிசைக்கு உரிமையுடைய வேளாளரே யாவர்; இவர் தமக்குரிய இருமூன்று கடமைகளாவன; ஓதலும் வேட்டலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் என இவை. இவ் வறுவகைத் தொழில் வேளாளர் அல்லாத ஏனைப் பதினெண் வகுப்பினுட் பட்டார்க்கு அக்காலத்து இல்லாமையின், இச் சூத்திரத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/244&oldid=1591922" இலிருந்து மீள்விக்கப்பட்டது