பக்கம்:மறைமலையம் 29.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

8. வடநாட்டிற் குடியேறிய வேளாளர்

த்

நாகரிக வாழ்க்கையிற் சிறந்த இத் தமிழ்மக்கள் தென்னாட்டின்கண் மட்டுங் குடிவாழ்ந்தவர் அல்லர். இவர்கள் இத் தமிழ்நாட்டின் மேல் கடற்கரைப் பக்கமாகவும் வடக்கு நோக்கிச்சென்று இமயமலைச்சாரல் வரையிலுள்ள வ நாடெங்கும் பரவி, ஆங்காங்கு நாடு நகரங்கள் அமைத்துத் தமது நாகரிகத்தைப் பெருக்கி வந்தனர். இங்ஙனம் பெருக்கி வந்த தமிழர்களுள் வேளாள வகுப்பினரே முதன்மையானவர். வடக்கே மேல்கடற்கரையைச் சார்ந்த பல ஊர்களும் நகர்களுங், கீழ்கடற்கரையைச் சார்ந்த தெலுங்குநாட்டு ஊர்களும், அங்கு அரசாண்ட ஆந்திர சாளுக்கிய அரசர்களும், 'வேள்புலம்' 'வேளாளபுரம்’ ‘வேளகம்” 'வேள்காம்' 'வேள்பட்டி' எனவும்; 'வேளிர்' 'வேண்மார்' எனவும் முறையே வழங்கப்பட்டு வந்தமையே இதற்குச் சான்றாம். வடக்கே கீழ்கடற் கரையிலுள்ள நாடுகளை அரசாண்ட சளுக்கியர்களும் வேளாளரேயாவர்; “வேள்புல அரசர்களுக்கு வேந்தர்” என்னுந் திவாகரச் சூத்திரமும் இதற்குச் சான்றாம். இவ் வேளாள அரசர்கள் வடக்கே கங்கையாறு பாயும் டங்களிற் பருந்தொகையினராகிய தம் மினத்தவரோடு குடியேறி வாழ்ந்து வந்தமை பற்றி, வேளாளர் 'கங்கையின் புதல்வர்' என்றும் வழங்கப்படுவர். இங்ஙனம் வடநாடுகளில் அரசாண்ட வேளிரும் அவர் இனத்தவருமான வேளாண்மக்கள் தென்னாட்டிலிருந்த தம் முன்னோரைப் பிரிந்து போனவரனுேம், அவர்கள் தம் முன்னோரின் பிறப்பிடமான தமிழ்நாட்டையும், அதன்கண் தம் முன்னோர் வழிவந்த

வேளாண்

மரபினரையும் மறந்தவரல்லர். காலம் வாய்த்துழியெல்லாம் அவர்கள் தென்னாட்டிலுள்ள தம் உறவினரோடு உறவு கலந்தும், நேரிமலைக்குத் தெற்கேயுள்ள காடுகளை யழித்து அவற்றின்கண் நாடுநகரங்கள் அமைத்து அரசுபுரிந்தும் வந்தனர்.

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/248&oldid=1591930" இலிருந்து மீள்விக்கப்பட்டது