பக்கம்:மறைமலையம் 29.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

9. இந்தியாவின் வடமேற்கிற் குடி புகுந்த ஆரியரின் புலையொழுக்கம்

உள்ள

இவ்வாறிவர்கள் இந்தியாவினுள் எங்கும் மேம்பட்டு வாழு நாளையில், இவ்விந்திய நாட்டின் வட வெல்லையாய் இமயமலைக்கும் வடக்கே நெடுந்தொலைவில் இந்நிலவுருண்டையின் வடமுனைநாடுகளில் இருந்த ஆரியர், அந்நாடுகள் வரவரக் குளிர்மிகுந்து உயிர்வாழ்வதற்கு ஏற்ற தன்றாய் மாற, அவர்களுட் பலர் தாம் இருந்த இடத்தை விட்டுத் தெற்கு நோக்கிவந்து, இவ்விந்திய நாட்டின் வடமேற் கெல்லையிலுள்ள பெலுசித்தானத்தின் வழிப் புகுந்து பஞ்சாபிலுள்ள சிந்துயாற்றங்கரையிற் குடியேறினார்கள்.' அப்போது அங்கு அரசாண்ட தமிழரசர்களாகிய வேளிர், பல நகரங்கள் அமைத்து வலிய கோட்டைகள் கட்டி வலிமையும் நாகரிகமும் உடையராய் விளங்கினரென்பது அவர்பால் வந்தெய்திய ஆரியரே தம்முடைய இருக்குவேதப் பாட்டுகளிற் கூறுமாற்றால் நன்குவிளங்கும்.

1

“பொன்னாலும் மணிக்கலன்களாலும் ஒப்பனை செய்து கொண்டவர்களாய் அவர்கள் (தாசர்கள்) இந்நிலத்தின் மேல்

ஒரு மூடுவலையைவிரித்தார்கள்”2

"இலபிசனுடைய வலிய கோட்டைகளை இந்திரன் உடைத்துப் பிளந்தான்

993

“மறஞ்சிறந்த நெஞ்சினனாகிய நீ பிப்ருவின் கோட்டை களை உடைத்து வீழ்த்தினாய், ஆரியர்களையுந் தாசியர்களையும் நீ நன்றாகப் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும், உறுதியாகக் கட்டிவைக்கப்பட்ட கஷ்ணாவின் கோட்டைகளை அவன் (இந்திரன்) துண்டு துண்டாகப் பிளந்தான்.”4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/250&oldid=1591934" இலிருந்து மீள்விக்கப்பட்டது