பக்கம்:மறைமலையம் 29.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் - 29

மகவான், நீ முந்நூறு எருமை மாடுகளின் இறைச்சியைத் தின்று, மூன்று தொட்டிச் சோமபானத்தைப் பருகிய போது, தேவர்களெல்லாரும் வென்றி முழக்கத்தை எழுப்பினார்கள்; அவன் அரவினைக் கொன்றதற்காக அவனைப் புகழ்ந்தார்கள்.'

என்னும் பாட்டே சான்றாம். மயக்கத்தைத் தருங் கள்ளை யொத்த சோம பூண்டின் சாற்றை ஏராளமாகப் பருகிய தல்லாமலும், முந்நூறு எருமை மாடுகளையுங் கொலை செய்து பலியூட்டி ஆரியர் தம் தெய்வமாகிய இந்திரனுக்கு ஒருகால் வெறியாட்டு அயர்ந்தமை இதன் கண் விளக்கமாகச்

சொல்லப்பட்டிருக்கின்றதன்றோ?

1

இங்ஙனமே வெள்ளாடுகளுஞ் செம்மறிக்கிடாய்களும், எருதுகளும், ஆக்களும், குதிரைகளும், ஆரியரால் அளவின்றிக் கொல்லப்பட்டமையினை இருக்கு வேதத்தின் முதன் மண்டிலம், ஐந்தாம் மண்டிலம், ஆறாம் மண்டிலம், பத்தாம் மண்டிலங்களில் இடையிடையே காணலாம். இச்சிற்றுயிர்களையே யல்லாமல் தம்மையொத்த மக்களையுங்கூட ஆரியர் கொலைபுரிந்து புருஷ மேதம் செய்தமையுஞ் சதபத பிராமணத்தாற் புலனாகின்றது; கடைசியாக ஓர் ஆண்மகனைக் கொன்று பலியூட்டினவன் சியாபர்ணசாய காயனனே ஆவன் என்று சதபதபிராமணங் கூறுதல் காண்க. ' இவ்வாறாகக் குடியுங் கொலையும் மலிந்த வெறியாட்டுச் சடங்குகள் கொண்டாடுவதைத் தவிர, அத் தீவினையை ஒழித்து எல்லா அருளும் உடைய ஒரு முழுமுதற் கடவுளைத் தமக்கு இயன்றமட்டுமாவது வணங்குதலில் ஆரியர்க்குக் கருத்துச் செல்லாமை, அவர்கட்கு இன்றியமை யாததாகிய மீமாஞ்சை நூலாலும் நன்கு விளங்கும்; இம் மீமாஞ்சை நூல் முழுமுதற்கடவுள் என ஒன்று இல்லை என்று மறுப்பதோடு, பன்னூறு வகையவான இத்தகைய வெறியாட்டு வேள்விச் சடங்குகளை வாளா விரித்தோதுதலும் யாம் கூறுவதன் உண்மையை நிலைநாட்டும். மேலும், ஆரியர் தாம் இயற்றும் இவ் வெறியாட்டு வேள்விச் சடங்குகளுக்குத் தமிழவேளாளர் இசையாமையை அவ்வாரியார் தாமே,

66

சென்று

இந்திரனே, நீ நின் துணைவருடன் நின்கையிலேந்திய குலிசப்படையாற் செல்வம்மிக்க தாசியரைத் தனியே கொல்கின்றாய்! சடங்குகள் புரியாமல், எமக்கு முன்னமே பழையராய் உள்ள அவர்கள் வான் நிலத்தினின்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/253&oldid=1591940" இலிருந்து மீள்விக்கப்பட்டது