பக்கம்:மறைமலையம் 29.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் - 29

தெரிக்கும் உண்மையுரைகளும், அவை மலமாசு தீர்ந்து இறைவனைத் தலைக்கூடி நிற்கும் வகையாகிய தவநிலைகளு இன்னும் இவை போல்வனவும் நிரம்பிக் கிடக்கும். இவ்விரு வேறு அடையாளங்கள் கொண்டு ஆரிய மொழியில் ஆரியர் தமிழர் என்னும் இவ்விரு வேறு வகுப்பாரும் இயற்றிய செய்யுட்களையும் நூல்களையும் பிரித்து அறிந்து கொள்க.

இனி, மண் நீர் நெருப்புக் காற்று வான் என்னும் ஐம்பெரும் பொருள்களின் கலப்பாற் றோன்றிய இவ்வுலகங்களின் உள்ளும் புறம்புமாகிய எவ்விடங்களினும் இறைவன் எள்ளில் நெய்போற் கலந்து நிற்பனாயினும், மக்கள் தன்னை எளிதில் கண்டு வழிபடுதற் பொருட்டு அவன் அனற்பிழம்பின் கண்ணே முனைத்துத் தோன்றுவன். அது பற்றியே,

“சுடர்கின்ற கொலந், தீயே யெனமன்னு சிற்றம் பலவர்’

என்று மாணிக்கவாசகப் பெருமானும்,

“பொங்கு அழல் உருவன் பூத நாயகனால்”

என்று திருஞானசம்பந்தப் பெருமானும்,

“எரி பெருக்குவர் அவ்வெரி ஈசனது உருவருக்கமது ஆவது உணர்கிலார்'

என்று திருநாவுக்கரசு நாயனாரும்

“அணுவாகி ஓர் தீயுருக் கொண்டு"

என்று (திருநனிபள்ளித் தேவாரம்) சுந்தரமூர்த்தி நாயனாரும் அருளிச் செய்திருக்கின்றனர். அனற்பிழம்பு இறைவனுக்குத் திருமேனியாய் நிற்றலின் உண்மையைச் 'சிவஞானபோத ஆராய்ச்சி'யில் விரித்து விளக்கியிருக்கின்றேமாகலின் அதனை அங்கே கண்டு கொள்க.

இங்ஙனந் தீப்பிழம்பும், அத் தீப்பிழம்பின் வடிவாய் வானத்தின்கட்டிகழும் ஞாயிற்று மண்டிலமும் இறைவற்குச் சிறந்த திருமேனியாதல் கண்டு, தீயினையும் ஞாயிற்றினையும் பண்டைக்காலந்தொட்டே தமிழ்முது மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆரியரும் அங்ஙனமே அவ்விரண்டனையும் வழிபட்டு வருவரெனின்; அவர் அவற்றையே தெய்வங்களாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/257&oldid=1591948" இலிருந்து மீள்விக்கப்பட்டது