பக்கம்:மறைமலையம் 29.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

233

கருதி வணங்குவரல்லது, அவற்றுக்கும் மேற்பட்ட முழு முதற் கடவுள் ஒன்று உண்டென்றும், அவ்வொன்றே அவ்விரண்டிலும் ஏனை ஒளியுடைப் பொருள்களிலும் பிறவற்றிலும் ஊடுருவி விளங்குவதென்றும் ஒருசிறிதும் உணரார்; தீயை வளர்ப்பர், ஆனால் அது சிவபெருமான்றன் உருவ வகைகளில் ஒன்றாதலை அவர் உணர்ந்திலர்' என மேலெடுத்துக் காட்டிய திருநாவுக்கரசுநாயனார் அருளிச் செய்த திருப்பாடலும் அறிவுறுத்துதல் காண்க. இங்ஙனமே,

"அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ

என்று அந் நாயனார் மீண்டும் அருளிச் செய்யுமாற்றால், ஞாயிற்றினை வணங்கும் ஆரியர் அஃது இறைவற்கோர் உடம்பாதலைச் சிறிதும் உணர்ந்திலரெனத் தெளிவித்தல் காண்க. ஆரியர் தீயினையும் ஞாயிற்றினையுந் தனித் தனித் தெய்வங்களாகக் கொண்டு வணங்கா நிற்கத், தமிழரோ அவற்றை எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுளுக்குச் சிறந்த வடிவங்களாக மட்டும் வைத்து வழிபடா நிற்பர்.

6

ஆகவே, ருக்கு முதலான வேதங்களில் தீயையும் ஞாயிற்றையுந் தனித்தனித் தெய்வங்களாக வத்து வணக்கவுரை கூறும் பாட்டுகளெல்லாம் ஆரியராற் செய்யப் னவாகுமென்றும் அவை தம்மை இறைவன்றன் ஒளி வடிவங்களாக வைத்து வழிபடும் பாட்டுகளெல்லாந் தமிழ்ச் சான்றோராற் செய்யப் பட்டனவாகு மென்றும் பகுத்துணர்ந்து கொள்க. விசுவாமித்திரர் என்னுந் தமிழரசமுனிவராற் செய்து சேர்க்கப்பட்ட இருக்குவேத மூன்றாம் மண்டிலத்தில் உள்ள காயத்திரி மந்திரமானது, ஞாயிற்று மண்டிலத்தின்கண் முனைத்து விளங்கும் பர்க்கன் என்னும் பெயருடைய ய சிவபிரான் மேற்றாய் விளங்குதலே யாம்கூறும் உண்மைக்குச் சான்றாம் என்க.

ரிய

இவ்வாறாக, ஆரியரைத் திருத்தும் பொருட்டுத், தமிழ்ச்சான்றோர் அவரோ டுடன் பழகி அவர்தம் ஆ மொழியையுங் கற்று, அவர் வணங்கிய தீயும் ஞாயிறும் என்னும் இரண்டின் வழியே சிவபிரானை வழிபடும் உயர்ந்த நெறியை அவர்க்கு உய்த்துணரவைத்துக் காட்டியும் அவ் வாரியர் அதிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/258&oldid=1591950" இலிருந்து மீள்விக்கப்பட்டது