பக்கம்:மறைமலையம் 29.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மறைமலையம் - 29

கருத்தில்லாதவராய், விலங்கினங்களைக் கொன்று அவற்றின் ஊனைத் தின்னும் வெறியாட்டு வேள்விகள் புரிவதிலேயே முயற்சியுங் கருத்தும் உடையராய் நின்றனர். உயர்ந்த நுண்பொருள் உணர்ச்சியில் அவர்க்கு உள்ளஞ் செல்லாமையைக் கண்ட தமிழ்ச்சான்றோர் எப்படியாவது அவரை உய்விக்கவேண்டுமென எண்ணி, அவர்தங் காடுந்தன்மைக் கேற்றதாக ஓர் உயர்ந்த கடவுள் வணக்கத்தை நிலைபெறுத்துவான் வேண்டிச் சீகண்ட உருத்திரர்' மேற் சில பதிகங்களுஞ் சில வழுத்துரைகளும் இயற்றி அவற்றையுஞ் சேர்த்து இருக்குவேதத்தை ஒழுங்குபடுத்தினர். 'சீகண்ட உருத்திரர்' நான்முகன் திருமால் காலருத்திரர் என்னும் மூவர்க்கும், இந்திரன் வருணன் மித்திரன் முதலான ஏனைத் தேவர்கட்கும் மேற்பட்டவராய்ச், சைவசமயத்தவரால் வணங்கப் படும் முதற்பெருந் தெய்வமாய் இருத்தலின், அவரை வணங்குதற்குப் புகுந்த வளவானே, ஆரியர் ஏனைச் சிறு தெய்வ வழிபாட்டையும் உயிர்க் கொலையையும் விட்டுப் பையப் பையத் தமது தமிழ்க் கொள்கையைத் தழுவுவரெனத் தமிழ்ச் சான்றோர் எண்ணினார். எண்ணியும், இவை யெல்லாஞ் செய்து வைத்தும் என்! ஆரியர் இன்றுவரையிற் றமது சிறுதெய்வ வழிபாட்டை விட்டவர் அல்லர். இன்னும் உற்றுநோக்கின், அவர்அச்சிறு தெய்வ வழிபாட்டினுந் தாழ்ந்த மக்கள் வழிபாட்டிலே இப்போதும் மிகுதியாய் இறங்கி விட்டனர்; இராமன், கண்ணன் முதலான அரசர்களையே மிக வணங்குவதோடு, 'தம்மின் வேறாகக் கடவுள் ஒன்றில்லை, தாமே கடவுள்' என்னும் ஒரு பொல்லாத கொள்கையையும் விடாப்பிடியாய்க் கைக்கொண்டு ஒழுகி வருகின்றார்கள். அதுமட்டுமோ, சீகண்ட உருத்திரரையுஞ் சூத்திரர்க்குரிய சூத்திரதெய்வமென ஒதுக்கி வைத்துவிட்டார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/259&oldid=1591952" இலிருந்து மீள்விக்கப்பட்டது