பக்கம்:மறைமலையம் 29.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235

11. மாயாவாதி ஒருவர் உருத்திரவழிபாடு தமிழரதன்று என்றது பொருந்தாமை

உண்மையிவ்வாறிருக்க, ‘எல்லாம் பொய், நானே கடவுள்' என்னும் மாயாவாதக் கொள்கையுடைய தமிழர் ஒருவர், உருத்திர வழிபாடு ஆரியர்க்கே உரியதெனவும் அதனை ஆரியரே தமிழர்க்குத் கற்பித்தாரெனவும், இந்திர வருண வழிபாடுகளையே ரியர் தமிழரிடமிருந்து பழகிக் கொண்டாரெனவுஞ் சான்றுகள் காட்டாது தமக்குக் தோன்றியவாறே கூறினார். உருத்திரவழிபாடு ஆரியர்க்கே உரியதாயின், இருக்கு வேதத்திலுள்ள முழுத்தொகைப் பதிகங்கள் ஆயிரத்து இருபத்தெட்டில் இருநூற்றைம்பது பதிகங்கள் இந்திரன் மேலும், இருநூறு பதிகங்கள் அக்நி மேலும் நூறு பதிகங்கள் சோமப்பூண்டு சோமபானத்தின் மேலும், ஏனைய ஏனைத் தேவர்கள் மேலுமாக, அவற்றுள் மூன்று நான்கு பதிகங்களே உருத்திரர்' மேலனவாய் இருத்தல் என்னை? உருத்திரர் மேல் மூன்று நான்கு பதிகங்கள் அல்ல, எத்தனையோ பல இருக்கு வேதத்தில் உள்ளன வென்று கூறும் அவர் அப் பதிகங்கள் இவ்விவையென எடுத்துக் காட்டாமையே அவரது கூற்று உண்மையன்றென்பதனை நன்கு புலப்படுத்தும், ஏனைத் தேவர்கள் மேல், முதன்மையாய் அக்நிமேற் பாடப்படும் பதிகங்களில் இடையிடையே சிற்சில இடங்களில் உருத்திரப் பெயர் வருமாயினும், ஆண்டது அக்நியையும் உருத்திர கணங் களையும், ஒரோவழிச் சீகண்டருத்திரரையுங் குறியாநிற்கும். அவையெல்லாந் தமிழ்ச் சான்றோராற் சேர்க்கப்பட்டனவே

யாம்.

இன்னும், உருத்திரவழிபாடு ஆரியர்க்கே உரியதாயின் வடநாடு தென்னாடுகளில் அவ் வேதங்களை நன்கு கற்றுணர்ந்த கு ஆரியப்பார்ப்பனர் அனைவரும் அவ்வுருத்திரனைச் சூத்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/260&oldid=1591954" இலிருந்து மீள்விக்கப்பட்டது