பக்கம்:மறைமலையம் 29.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

-

மறைமலையம் – 29

தெய்வமென வழிபடாமல் ஒதுக்கி, இராமன் கண்ணன் நாராயணன் முதலான ஏனையோரையே வழிபடுதல் என்னை? தென்னாட்டில் உள்ள தமிழர் அவ்வழிபாட்டிற்கு உரியரல்ல ராயின், அவர் தென்னாடெங்கணும் பல்லாயிரந்

திருக்கோயில்கள் பண்டுதொட்டு அமைத்து அவற்றின்கண் அவ்வுருத்திரனை வழிபட்டு வருத லென்னை? இந்திரன் வருணன் முதலான சிறு தெய்வ வணக்கமே தமிழருக்கு உரியதாயின், தமிழ்நாட்டில் ஓரிடத்தேனும் அத்தெய்வங் களுக்குத் தனிக்கோயில்கள் இல்லாமையும், அவற்றை அவர் வணங்காமையும் என்னை? பண்டை நாட்டொட்டுத் தமிழ் மேன்மக்கள் சிவபிரானையே வழிபட்டு வந்தனர் என்பதற்குக், குமரிநாடு கடல் கொள்ளப்படுமுன் பாடப்பட்டதாகிய தமிழ்ச் செய்யுள் ஒன்றில்,

“பணியிய ரத்தைநின் குடையே முனிவர்

முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே

21

எனப் போந்த குறிப்பும், அந்நாள் முதல் இந்நாள் காறும் ஒரு தொடர்பாகப் போதருகின்ற சிவ வணக்கச் செய்யுட்களுஞ், சிவபிரான் திருக்கோயில்கள் திருவிழாக்கள் முதலியவற்றின் மாட்சியும் நன்கு சான்று பகர்கின்றனவல்லவோ? சிவபிரானோடு ஒப்பவைத்து ஏனைச் சிறு தெய்வங்களைத் தமிழ் மேன்மக்கள் வழிபட்டு வந்தனர் என்பதற்கு ஒரு தினையளவு சான்றும் இல்லாதிருக்கத், தாம் தமிழரது வழிபாட்டை முற்று முணர்ந்தாற்போற் செருக்கிப் பொய்யுரை கூறித் தமிழரை இழித்துரைக்கப் புகுந்தது அறிவுடையாரால் நகையாடி விடுக்கற் பாலதாமன்றி மற்றென்னை? அற்றேற், காவிரிப் பூம்பட்டினத்தில் இந்திரனுக்கு விழா எடுத்தமையும் நெய்தல் நில மக்கள் வருணனை வழிபடுதலும் பழைய தமிழ் நூல்களிற் காணப்படுதல் என்னையெனின்; மழை வேண்டியுங் கடல் நீரால் இடர்நேராமைப் பொருட்டும் இந்திரனையும் வருணனையும் மருதநில நெய்தல் நில மக்கள் வணங்கும் வணக்கம் அவ்வந் நிலத்துக் குடிமக்களாற் செய்யப்படுவ தல்லது, தமிழ் நிலத்துள்ள எல்லா மக்களும் அவருள் உயர்ந்தாருஞ் செய்வதொன்றன்று, இஞ்ஞான்றம் இழிந்தாரான தமிழ்க் குடிமக்கள் செய்யும் மாரி மதுரைவீரன் முதலான சிறுதெய்வ வணக்கத்தை மட்டுங் கண்டு, ஆங்காங்குள்ள சிவபிரான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/261&oldid=1591956" இலிருந்து மீள்விக்கப்பட்டது