பக்கம்:மறைமலையம் 29.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

12. நடுநிலையுடைய ஐரோப்பிய ஆசிரியர் உருத்திரவழிபாடு தமிழரதென்றமை

இக்கோட்பாடு யாம்மட்டும் புதிதாகக் கூறுவதன்று, வடமொழி நூல்களை நடுநிைைலமையோடு எழுத்தெண்ணிக் கற்று அவற்றின்கண் நிகரற்ற புலமையுடையராய் விளங்கும் ஐரோப்பிய அறிஞரும், ஆரிய வேதங்களின் இடையிடையே காணப்படும் உருத்திர வழிபாடு சிவவழிபாடுகள் பண்டு தொட்டு ஆரியர்க்கு உரியன அல்லவென்றும், அவை தமிழர் பால் நின்றும் ஆரியர் கைக்கொண்டனவா மென்றும், இந்திரவருண வழிபாடுகளே ஆரியர்க்கு

உண்மையில் உரியனவாமென்றும் நடுநிலை பிறழாமல் உண்மையை உள்ளவாறே ஆராய்ந்து காட்டி விளக்கியிருக்கின்றார்கள். அவையெல்லாம் ஈண்டு எடுத்துக் காட்டலுறின் இது மிகவிரியும். 'மாக்ஸ்மூலர், மியூர், டெய்லர், வீபர், ராகொசின், கிரிபித் மாக்டனல் முதலான மிகச் சிறந்த வடநூற் புலவர்கள் எழுதியிருக்கும் அரும்பெரு நூல்களில் அவற்றின் பரப்பைக் கண்டுகொள்க.

இவ்வைரோப்பிய ய

அறிஞர்க்குள்ள ஆராய்ச்சித் திறத்திலும் வடமொழிப் புலமையிலும் நூறாயிரத்து ஒரு சிறு கூறேனும் வாய்ப்பப் பெறாதார் தாமுந் தமது அறியாமையை யே அறிவாகப் பிழைபடக் கருதி அவ்வைரோப்பியர் செய்த ஆராய்ச்சிகளையெல்லாம் பிழையென எளிதாகச் சொல்லி விடுவர். இவ்விந்தியநாட்டிற் பிறந்து, ஒவ்வொரு கோட்பாட்டிற் குரியராய், ஏனைக் கோட்பாடுகளை முற்றும் இகழ்ந்து, ஏனையோர் கூறுவனவற்றை நடுவுநின்று ஆராய்ந்து உண்மை கண்டறியும் வேட்கையிலராய்த், தாந்தாம் பிடித்த தனையே நிலை நாட்டும் பொய்ப்பற்று உடைய நம் இந்திய நாட்டுப் புலவர்களிற் பெரும்பாலார் ஆரியவேதங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/267&oldid=1591968" இலிருந்து மீள்விக்கப்பட்டது