பக்கம்:மறைமலையம் 29.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

243

உபநிடதங்கள் முதலியவற்றின் பொருள்களை நடுநின்று கண்டு உண்மையை உள்ளவாறு உரைக்கும் நீரர் அல்லர். ஆரிய வேதங்களுக்குச் சொற்பொருள்களும் உரைகளும் எழுதிய யாஸ்கர், சாயனார், மகீதர், அந்வதர் முதலியோரும், உபநிடதங்கள் வேதாந்த சூத்திரங்கள் முதலியவற்றிற்கு உரைகள் எழுதிய நீலகண்டர், சங்கரர், இராமாநுசர், மத்வர் முதலியோரும், பிற்காலத்தில் இவை தமக்கு உரைகளும் விளக்கங்களும் வரைந்த தயாநந்த சுரசுவதி, ராசாராம் மோகன்ராய் முதலியோருந் தாந்தாம் உரை வகுத்தற்கெடுத்த நூற் பொருள்களை நடுநின்று ஆராய்ந்துகண்டு கூறாமல், தாந்தாம் வேண்டிய பொருள்களை நுழைத்து, ஒருவரோ டொருவர் பெரிதும் மாறுகொண்டு உரை யுரைத்தலைச் சிறிது ஆராய்ச்சியுடையாரும் நன்கு உணர்ந்து கொள்வர்.

நிலன் நூல், வான்நூல், மொழிநூல், உயிர்களின் தோற்ற வளர்ச்சி நூல், மக்கட்டோற்றநூல் மனநூல், முதலான பல்வகை நூலுணர்ச்சியினும் ஒப்புயர்வில்லாப் புலமை யுடையராய் விளங்கும் ஐரோப்பிய அமெரிக்க அறிஞர்களில் வடமொழியையும் ஆராய்ந்து உண்மை காணப்புகுந்த புலவர்களே, நம் இந்திய உரைகாரரை விட அம் மொழிநூற் வி பொருள்களின் உண்மையை உள்ளவாறறிந்து உரைக்கும் நீரராவர். இவ்விரு திறத்தார் உரைகளையும் ஒத்துநோக்கிப் பயில்வார்க்கே யாம் கூறுவதன் உண்மை விளங்கும். 'யாமே பிரம மாதலால் எம்மிடத்தே எல்லா நூலுணர்ச்சியும் உள்ளன; யாம் பிறர் நூல்களை உணர்தல் வேண்டாம்' என்று கூறித் தமதறியாமையையே அறிவெனக் கருதி இறுமாந்திருப்பார்க்கு எத்துணை உயர்ந்த அறிவுநூலும் வேண்டப்படுவதில்லை அத்தன்மையினார்க்கு யாம் கூறும் உண்மையுரைகள் ஏறாவாதலால், அவரை விடுத்து ஏனை அறிவுவேட்கை யுடையார் பொருட்டே யாம் இஃது எழுதவேண்டிற் றென்க. இங்ஙனம் யாம் எழுதியது கொண்டு ஐரோப்பிய அமெரிக்க அறிஞரே இத்தகைய ஆராய்ச்சியிற் சிறிதும் பிழைபடுதல் இல்லாதவர் என்று கொள்ளற்க. அவர் வடமொழியையும் வடமொழி நூல்களையும் ஆராய்ந்த அளவுக்குப் பழைய செந்தமிழ் மொழியையும் அதில் எழுதப்பட்ட நூல்களையும் நன்காராய்ந்து பாராமையால், தமிழரின் பண்டை வழக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/268&oldid=1591970" இலிருந்து மீள்விக்கப்பட்டது