பக்கம்:மறைமலையம் 29.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மறைமலையம் -29

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

தமிழ்ச் சொற்கள் மிகுதியாக வடமொழியில் கலந்துள்ள உண்மையினையும், பாணினிக்கு நானூறு ஆண்டுகள் முந்தியவர் தொல்காப்பியர் என்ற செய்தி யினையும், வடமொழியிலும் தொல்காப்பிய இலக்கணமே சிறப்பு வாய்ந்தது என்ற கருத்தினையும் அடிகளார் விளக்கியுள்ளார். வாழ்வியல் வரலாற் றாராய்ச்சிக்கும் மொழிவரலாற்றாராய்ச்சிக்கும் சொல்லாய்வு இன்றியமையாத கருவியாயிருத்தலை வற்புறுத்தும் அடிகளார், தத்துவ உரிமையைக் காத்து மெய்ப்பொருள் காணுதலையே கடைப்பிடிக்க வேண்டுகிறார். மெய்ப்பொருள் காணவும் காக்கவும் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய பழந்தமிழ் நூல்கள் நமக்குப் பெருந்துணைகளாகின்றன என்பது அவர்தம் கருத்தாகும்.

இந்நூல் வழி, அடிகளார் தமிழிகழ்வு, தமிழ் நாகரிக இகழ்வு முதலியவற்றைத் தக்க சான்று களுடன் மறுத்தொழிக்க முற்பட்டார்.

டாக்டர் நா. செயப்பிரகாசு

மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள் (பக். 8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/27&oldid=1591690" இலிருந்து மீள்விக்கப்பட்டது