பக்கம்:மறைமலையம் 29.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

L

13. உருத்திரனிலுஞ் சிறந்த சிவத்தைத் தமிழர் மறைத்து வைத்தமை

இனி, உருத்திர வழிபாட்டினுஞ் சிறந்த சிவழிபாட்டைத் தமிழ் நன்மக்கள் இருக்குவேதத்தின்கட் புகுத்துச் சொல்லாமை என்னையெனின்; உயிர்க்கொலையாகிய கொடுஞ்செயலைப் புரிந்து, அதற்கேற்ற இந்திரன் வருணன் மருத்துக்கள் முதலான கொடிய சிறு தெய்வங்களை வணங்கி வெறியாட்டு வேள்விகள் புரிந்துவருவாரான ஆரியர்க்கு, அன்பும் அருளும் இன்பமுமே உருவான சிவத்தின் வழிபாட்டைக் கற்பித்தால் அதில் அவர்க்குக் கருத்துச் செல்லாது. அதுபற்றியே அம் முழுமுதற் கடவுள் வணக்கத்தை ஆண்டுச் சொல்லாமல் அக் கடவுள் அருள்வழி நின்று அழித்தற் றொழிலைச் செய்வாரான சீகண் உருத்திரனின் வணக்கத்தை மட்டும் ஆண்டுச் சேர்த்தார்கள். அவரவர்தம் மனநிலையும் அறிவுநிலையும் அறிந்து அவ்வவற்றிற்குத் தக்கதாக மெய்ப்பொருள்களைப் படிப்படியாக அறிவுறுத்தி, அவரவரை அவ்வாற்றான் மேனிலைக்குக் காண்டு வருதலே மெய்யுணர்வுடைய தமிழ்ச்சான்றோர் கோட்பாடு. இம் முறையால், இந்திரன் வருணன் முதலிய ஏனைக் கடவுளர் எல்லாரினும் உயர்ந்த சீகண்ட உருத்திரரை வணங்குவார் அதனால் மெய்யுணர்வு பிறந்து, அவர்க்கு மேற்பட்ட மகேசுவரர் சதாசிவரை வழிபட்டு, அதன்பின் மலமாசு தீர்ந்து, அவர்க்கு மேற்பட்ட முழுமுதற் கடவுளாகிய சிவத்தினைத் தலைக்கூடி அழியாப் பேரின்பத்தில் வைகுவர். இப் படிவழி முறைதான் சைவசித்தாந்தத்தால் உணர்த்தப் பட்டதாகும். சீகண்ட உருத்திரர் சைவசமயத்தவரால் வணங்கப் படுபவரேனும், அவர் சைவசித்தாந்த முடிபொருளாக உள்ள முழுமுதற் கடவுளாகிய சிவம் அல்லர். இவ்வுண்மை சிவஞானமாபாடியத்திலுங் காண்க. இருக்குவேதப் பாட்டுகளில்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/271&oldid=1591976" இலிருந்து மீள்விக்கப்பட்டது