பக்கம்:மறைமலையம் 29.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம் - 29

நினைந்தே செய்யப்படுவனவாம். முழுமுதற்சிவம், மூவர்க்கும் ஏனைத் தேவர்க்கும் மேற்பட்டதென்பது,

“மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான்"

என்று மாணிக்கவாசகப் பெருமானும்,

66

‘எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ

என்று திருஞானசம்பந்தப் பெருமானும்

66

அவனருளே கண்ணா கக்காணி னல்லால்,

இப்படியன் இவ்வுருவன் இவ்வண் ணத்தன்

இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே”

6 என்று திருநாவுக்கரசு அடிகளும்

அருளிச்

செய்தவாற்றால் நன்கு உணரப்படும். ஈண்டுக் கூறியவாற்றால்,

முழுமுதற் சிவத்தை நினைந்து செய்யப்படுகின்றுழி

அன்புருவாகவுந் தான் செய்யும் அழித்தற்றொழிலை நினைந்து செய்யப்படுகின்றுழிக் கொடிய வடிவாகவும் வைத்து வழுத்தப்படுஞ் சீகண்டருத்திர வழிபாட்டின்இருதிறமுஞ் சைவ சித்தாந்த வழிநின்ற பண்டைத் தமிழ் வேளாளர்க்கு உரியவேனும் ஆரியர்க்கு அவர் செய்துவந்த வெறியாட்டு வேள்விக் கேற்ற அச்சவடியே உணர்த்தப் பட்டமை தெள்ளிதிற் புலனாம்.

அடிக்குறிப்புகள்

1.

2.

திருத்தொண்டர் புராணம் மூாக்க நாயனார்

Governor - general

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/275&oldid=1591984" இலிருந்து மீள்விக்கப்பட்டது