பக்கம்:மறைமலையம் 29.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251

14. தமிழர்கள் ‘உபநிடதம்’ ‘சாங்கியம்’ முதலிய அறிவுரை நூல்கள் வகுத்தமை

இனி, வேதங்களை ஒழுங்குபடுத்தி, உருத்திர வழிபாட்டைக் கற்பித்த பின்னும், வெறியாட்டு வேள்விகள் புரிதலையுஞ், சிறு தெய்வ வணக்கத்தையும் ஆரியர் விட்டு நீங்காமையின், ஆ

அவ்வேள்விகளையும்

அவ் வணக்கத்தையும் அறவே

தொலைத்தற் பொருட்டாகவே தமிழ்ச் சான்றோர்கள் ஈசகேந கடப்பிரசினமுண்டக மாண்டூக்ய தைத்திரீய பிருகதாரணியக சாந்தோக்கிய முதலான மிகப் பழைய அறிவு நூல்களாகிய உபநி தங்களையுஞ் சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் யோகம் வேதாந்தம் முதலான மெய்ப் பொருளாராய்ச்சி நூல்களையும் இயற்றினார்கள். வெறியாட்டு வேள்விச் சடங்கு களையுஞ் சிறு தெய்வ வணக்கத்தையுங் கூறும் இருக்கு முதலிய வேதங்கள் பயனிலவாதலும், உலகு உயிர் கடவுள் என்னும் முப்பொருட்டன்மைகளை உள்ளவாறு ஆராய்ந்து மெய்யுணர்வு தலைக்கூடி இன்பவுருவினதாகிய சிவத்தை எய்துதலே மக்கட் பிறப்பெடுத்ததன் பயனாதலும் இந் நூல்களில் நன்கு விளக்கி அறிவுறுத்தப்படுதல் காண்க. இந் நூல்கள் எழுந்த பிறகுதான் கன்மகாண்டத்தின் இழிவும், ஞானகாண்டத்தின் உயர்வும் பிரிந்து விளங்கலாயின. வேதத்தினும் வேதாந்தமாகிய உபநிடதங்களே சிறந்தன வெனவும், வேதாந்த உணர்ச்சியே பெரும்பயனை யளிப்பதெனவும் எல்லாரும் விளங்க

அறிவாராயினர். முழுமுதற் கடவுளாகிய சிவபிரான்முன், இந்திரன் அக்நி வருணன் மாதரிஸ்வான் முதலாக வேதங்களிற் சொல்லப்பட்ட கடவுளர் ஒரு சிறு துரும்பையும் அசைக்க வலியிலராதலும், அவனது அருட்சத்தியாகிய உமைப் பிராட்டியாராலன்றி அவன் அறியப்படாமையுங் கேநோப நிடதத்தில் நன்கு வலியுறுத்தப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/276&oldid=1591986" இலிருந்து மீள்விக்கப்பட்டது