பக்கம்:மறைமலையம் 29.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

15. இந்திரன் முதலிய பெயர்கள் சிவத்தைக் குறியாமை

இனி, இவ் வுண்மைகளைப் பகுத்துணர மாட்டாத மாயாவாதியார் இந்திரன் வருணன் முதலான பெயர்கள் பற்பல தெய்வங்களைக் குறிப்பன அல்ல, அவையெல்லாம் ஒரு முழுமுதற் கடவுளையே குறிப்பனவாம் என்று கூறினார். இந்திரன் முதலிய பெயர்கள் முழுமுதற் கடவுளையே குறிப்பது உண்மையாயின், அப்பெயர்களால் உணர்த்தப்படும் அத்தெய்வங்கள் முழுமுதற் கடவுட்குரிய இலக்கணங்கள் உடை யனவாய் இருத்தல் வேண்டுமல்லவோ? அக்நி இந்திரன் சோமன் என்போர் பிரசாபதியாற் படைக்கப்பட்டவர் எனச் சதபத பிராமணங் கூறுதலானும்,' மித்திரன் வருணன் தாத்திரி அரியமான் அம்சன் பகன் விவஸ்வதன் ஆதித்யன் என்னும் எண்மரும் அதிதியின் புதல்வர் என அஃது அங்ஙனமே எடுத்துச் சொல்லுதலானுங், கட்குடியும் விலங்குகளின் கொலையால் வரும் ஊன் உணவும் அவர் கைக்கொண்டமை மேலே காட்டப் பட்டமையானுந், தந்தையைக் கொல்லல் மகளைப் புணர்தல் முதலான மக்களினும் இழிந்த பல செயல்களை அத் தெய்வங்கள் புரிந்தமை அங்ஙனமே அந்நூல்களிற்காணப்படுதலானும், அவர் பகைவரால் தோல்வியடைந்தமையுந் தாம் இறவாதிருத்தற் பொருட்டுச் சாவாமருந்து வேண்டினமையும் அவற்றின்கண் வளிப்படையாகக் காட்டப்பட் டிருத்தலானும் அவரெல்லாருஞ் சிற்றுயிர்களேயாவ ரல்லது, இக் குற்றங்கள் ஒரு சிறிதுந் தீண்டப் பெறாத முழுமுதற் சிவம் ஆகார் என்பது சிறிதுணர்வுடையார்க்குந் தெற்றென விளங்கும். சொற்களும், சொற்களால் உணர்த்தப்படும் பொருள்களும், அப்பொருள்களின் இலக்கணங்களும் ஒன்றோடொன்று மாறுபட்டு வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடப்பவும்,

அச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/277&oldid=1591988" இலிருந்து மீள்விக்கப்பட்டது