பக்கம்:மறைமலையம் 29.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

253

அவற்றையெல்லாம் ஒன்றெனல் உண்மையாராயுந் தருக்கத் திற்குக் கட்டுப்படாமல் தமக்குத் தோன்றியவாறே பேசும் மாயாவாதியார் ஒருவர்க்கேயன்றி ஏனை மெய்யுணர் வுடையார்க்கு அடாது. நல்ல தண்ணீரும் உப்புத் தண்ணீரும் தம்மில் வேறுபட்டனவாய் இருப்பவும், அவையிரண்டனையும் ஒன்றெனக் கூறி உப்புத்தண்ணீரைக் கொடுத்தால் எவரேனும் பருகுவரா? சோறும் புழுவும் வேறாயிருக்க அவை தம்மை யொன்றென வற்புறுத்திச், சோற்றுக்கு மாறாகப் புழுக்களை வட்டித்தால் அவற்றை எவரேனும் உண்பரா? இரும்பும் பொன்னும் வேறாயிருப்ப அவையிரண்டும் ஒன்றெனவே வாயாடிப், பொன்னுக்கு மாறாக இரும்பை எடுத்துக் கொடுத்தால் மாயாவாதியார் அதனை ஏற்றுக் கொள்வரா? ஆதலால் அறிவாராய்ச்சிக்கும் உலக வழக்கிற்கும் இசையாதபடி வைத்து, எல்லாச் சிறு தெய்வப் பெயர்களும் ஒரு முழு முதற் கடவுளையே குறிக்கு மென்றல் அறிவுடையார் கழகத்தில் நகையாடி விடுக்கப்படும் என்க.

அற்றேல், இருக்கு வேத முதன் மண்டிலம் நூற்றறுபத்து நான்காம் பதிகத்தில் “சத்துப் பொருள் ஒன்றேயுளது, கற்றவர் அதனைப் பல பெயர்களால் வழங்குகின்றார்கள்” என்று காணப்படுதல் என்னையெனில்; இக் கொள்கை இருக்கு வேதத்தில் இவ்வோரிடத்தில் தவிர வேறெங்குங் காணப் ப ாமையானும், ஓரிடத்தில் மட்டும் புதிதாகக் காணப்படும் இக் கொள்கை ஆரியர்க்கு உரியதாயின் மேற்காட்டியவாறு முதற்கடவுள் இலக்கணத்திற்குப் பொருந்தாமல் மக்களினுந் தாழ்ந்த பழிச் செயல்களைப் புரிவாரான அச்சிறு தெய்வங் களை அவர் வணங்குதல் செல்லாமையானும், இச்சிறு தெய்வப் பெயர்களெல்லாம் எல்லாம் முழு முழு முதற் சிவத்தை யே குறிப்பனவாயின், வேதங்களினுஞ் சிறந்த வேதாந்தமாகிய கேநோபநிடதத்தில் இத் தெய்வங்களெல்லாம் இயக்க வடிவத்திற் றோன்றிய சிவத்தின் முன் வலியிலராய் ஒழிந்தமை தெளிவுறுத்தப்பட்டதற்கு வேறுவழி காட்டுதல் இயலாமையானும் அக் கொள்கை ஆரியர்க்கு உரியதன் றென்பதே முடிபாம். பண்டைக் காலத்திருந்த தமிழ்ச் சான்றோர்கள், பல சிறு தெய்வங்களை வணங்கும் ஆரியரது சிறுமையை ஒழித்தல் வேண்டியே, ஆரிய வேதங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/278&oldid=1591990" இலிருந்து மீள்விக்கப்பட்டது