பக்கம்:மறைமலையம் 29.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேளாளர் நாகரிகம்

255

அதனால் அம்முதல்வனாவான் செல்லுதல் ஒருசிறிதுமில்லை யென்க. இஃது என்போலவெனின்; அரசன் ஆணைவழி நின்று அரசுசெலுத்தும் அமைச்சர் தண்டத்தலைவர் ஊர்காவலர் முதற் பலருந் தத்தம் அளவிற் கேற்ற தலைமைப்பாடும் பெருமையும் உடையரேனும், அது பற்றி அவரெல்லாம் அவ்வரசனேயாதல் சல்லாமை போலவும் அவர் மாட்டெ ல்லாம் ஊடுருவி நின்று அவர்க்கு அச்சிறப்பினை நல்குந் தனது ஆணையை அவர்மாட்டு நின்றும் அரசன் வாங்கிக் கொண்டவழி அவர் அவர் அப் பெருமையையும் பெயரையும் ஒருங்கிழத்தல் போலவும் என்க. இங்ஙனமாகவே, ஆரியர் வணங்கிய சிறுதெய்வப் பெயர்களும், அத்தெய்வங்கள் முதலான எல்லாச் சிற்றுயிர்களிலும் நிறைந்து நிற்குஞ் சிவத்திற்கும் பெயர்களாக முகமனாயத் தமிழ்ச் சான்றோரால் யல்லாமல், அப்பெயர்க்குரிய சிறுதெய்வங்கள் அச் சிவமாதல் ஒருவாற்றானும் இல்லையென் றொழிக. இதுவே, “ஏகம்சத் விப்ரா பகுதாவதந்தி” என்னும் அவ்விருக்கு வேதத்தொடர் மொழிக்குப் பொருளாமென்று கடைப்பிடிக்க. இன்னும் இதன் விரிவை எமது சைவ சித்தாந்த ஞானபோதத்திலும், சிவஞானபோத ஆராய்ச்சியிலுங் கண்டு கொள்க. இக் கூறியவாற்றால், உருத்திரசிவ முழுமுதற் கடவுள் வழிபாடொன்றுமே தொன்று தொட்டுச் சைவ வேளாளர்க்கு உரித்தாமெனவும், இந்திரன் வருணன்முதலான ஏனைச்சிறு தெய்வவழிபாடுமட்டுமே ஆரியர்க்கு உரித்தாமெனவும் பகுத் தறிந்து கொள்க.

உரைக்கப்பட்டனவே

அடிக்குறிப்பு

1.

சதபதபிராமணம், 11, 1, 6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/280&oldid=1591994" இலிருந்து மீள்விக்கப்பட்டது