பக்கம்:மறைமலையம் 29.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

257

அதுவே யுமன்றித் தமிழல்லாத வேறுமொழிகளிலும் பிரணவமானது வரிவடிவில் எழுதப்படுங்கால் தமிழுக்குரிய ஓ எழுத்தால் எழுதப்படுவதல்லது வேறுவடிவின்மையானும், பிரணவத்தின் ஒலிவடிவு வரிவடிவு இரண்டுந் தமிழ் மொழிக்குந் தமிழர்க்குமே உரியவாதல்தெற்றென விளங்கற்பாலதாம். இவையெல்லாம் எமது 'சைவ சித்தாந்த ஞான போதத்' தில் தமிழ்நான்மறை' என்ற தலைப்பின்கீழ்ப் பதினைந்து ஆண்டு கட்கு முன்னமே யாம் விரித்து விளக்கியிருக்கின்றேம். இந் நுட்பங்களை ஆய்ந்துணராது மாயாவாதியார் பிரணவம் வ மொழிக்கே உரியதெனக் கூறியது போலியுரையேயாம் என்க. ஓங்காரத் தமிழிற்குரியதாகவே, அதன் விரிவாய்த் தோன்றிய தமிழ்மொழியுந் தமிழ்மறைகளும் மட்டுமே D இறைவன் வாய்மொழியாமென்று தெளிந்துகொள்க. இன்னும் இம் மாயாவதியார் தமிழ்மொழிக்குத் தாய் பாகதமொழியா மென்னுந் தமது கூற்றிற்குச் சான்று ஏதுங் காட்டாமையின், அவர் கூற்றுச் சிறு மகார் கூறும் பொருள் இல் கூற்றேயாமென்க. இனிச் சைவ சமாயசிரியர் வேதங்களெனத் தாந்தழுவிக் கூறுபவை, பெரும்பாலுஞ் சிறு தெய்வ வெறியாட்டு வேள்விகளைக் கூறும் ஆரியவேதங்கள் அல்லவென்பதூஉம், அவை அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொரு ாருள் வேள்விகளைக் கூறுந் தமிழ்மறைகளே யாமென்பதூஉம் எமது திருவாசக விரிவுரையில் விரித்து விளக்கியிருக்கின்றே மாதலின், அதனை ஆண்டுக் கண்டுகொள்க; ஈண்டு விரிப்பிற் பெருகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/282&oldid=1591998" இலிருந்து மீள்விக்கப்பட்டது