பக்கம்:மறைமலையம் 29.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

17. வேளாளர் உபநிடதங்கள் இயற்றினமைக்குச் சான்று

இவையெல்லாம் ஒக்குமேனும், ஆரியமொழியிலுள்ள உபநிடதங்களைத் தமிழர் எழுதினாரெனக் கூறல் யாங்ஙனம் பொருந்துமெனிற்; கடவுள் உயிர் உலகு முதலான மெய்ப்பொருள்களைப் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சிகளை ஆரியப் பார்ப்பனர் அறியாது மயங்கினமையும், அவற்றை அவர்க்கு அஞ்ஞான்றிருந்த தமிழ் அரசர் அறிவுறுத்தினமையும் பழைய உபநிடதங்களிலேயே நன்கு எடுத்துச் சொல்லப் படுதலின் அவை தமிழ்ச்சான்றோரால் இயற்றப்பட்டன. ஐவர், வைஸ்வாநர ஆத்மாவைப்பற்றித் தமக்கு அறிவுறுத்தும் படி உத்தாலக ஆருணி என்பவரை அடைய அவர் அதனை அறிவுறுத்தும் ஆற்றல் தமக்கில்லாமையைத் தெரிவிக்க, அவரோடு அறுவரும் அஸ்வபதிகைகேயன் என்னும் அரசன் பாற் சென்று தமது விருப்பத்தையுணர்த்த, அவ்வரசன் அவர்க்குள்ள அறியாமையை முதலில் எடுத்துக் காட்டி, அதன்பின்னர் அவ்வாத்மாவைப் பற்றிய உண்மையை அவர்க்குத் தெருட்டினானென்று பழைய சாந்தோக்கிய உபநிடதங்கூறாநிற்கும்!' இன்னும் ஆரியவேதநூல் உணர்ச்சியிற் பெரிதும் புகழ் பெற்று விளங்கிய கார்க்கியபாலாகி என்னும் பார்ப்பன ஆசிரியன், காசீ மன்னனாகிய அஜாதசத்துரு என்பவன்பாற் பிரமத்தைப் பற்றிப் பிழைபாடான பன்னிரண்டு உரைகளைக் கூறித், தான் கூறியவற்றிலுள்ள அப்பிழைகளை அம் மன்னவன் எடுத்துக் காட்டியபின், அப் பார்ப்பனன் தன் அறியாமை யுணர்ந்து அவனுக்கு மாணாக்கனாகி, அவனாற் பிரமத்தின் உண்மைத் தன்மை தெளியப்பெற்றன னென்று பிருக தாரணி யகோபநிடதமுங் கௌஷீதகி உபநிடதமுங் கூறுதல் காண்க. இவ்வாத்ம ஞானமானது அரசரைத் தவிர,

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/283&oldid=1592000" இலிருந்து மீள்விக்கப்பட்டது