பக்கம்:மறைமலையம் 29.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேளாளர் நாகரிகம்

259

ஆரியப் பார்ப்பனர் எவரும் அறியாரென்பதும் அவ்

வுபநிடதங்களில் நன்கு வலியுறுத்தப்படுதல் காண்க. பிரவாகன ஜைவலி என்னும் அரசன், ஆருணி என்னும் ஆரியப் பார்ப்பன சிரியனுக்கு ஞானோபதேசஞ் செய்தபின், “ஓ கௌதமனே! நீ சொல்லிய படியே, இந்தக் கொள்கையானது துகாறும் பார்ப்பனர்க்குள் வழங்காமையால், அரச வாழக்கையானது எல்லா உலகங்களிலும் அரச வகுப்பினர் கையிலேயே தங்கியிருக்கின்றது”3 என்று, பழைய வேளிர் அரசர்க்கே மெய்யுணர்வும் அரசுரிமையுந் தொன்று தொட்டு உளவாதல் காட்டினமை சாந்தோக்கியத்தில் தெளிவுறுத்தப்படுகின்றது. இவ் விந்திய நாட்டுள் வந்தேறுங் குடிகளாய் ஆரியர் பிழைக்கவந்த ஞான்று, அரசராய் அவர்க்கு முன்னே தொட்டு இமயம் முதல் குமரிவரையில் இதன்கண் அரசாண்டவர்கள் தமிழ வேளாள அரசரே என்பது மேலே காட்டப்பட்டமை யானும், ஆரியப்பார்ப்பனர்க்கு அறிவுறுத்தும் அவ்வரசர்கள் தம்மை அவரோடு ஓர் இனப்படுத்திக் கொள்ளாமல் தம்மையுந் தமது மெய்யுணர்வினையும் அவரினின்றும் வேறுபிரிந்தே கூறுதல் மேற்குறிப்பிட்ட உபநிடதங்களில் நன்கு தெளியக் கிடத்தலானும் அவற்றிற் சொல்லப்பட்ட அவ் வரசர்கள் தமிழரேயாதல் ஐயுறவின்றித் துணியப்படுமென்க.

அடிக்குறிப்பு

1.

2.

23

3.

சாந்தோக்கியம், 5, 11 - 24

பிருகதாரணியகம், 2, 1 கௌஷீதகி, 4,

சாந்தோக்கியம், 5, 3, 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/284&oldid=1592002" இலிருந்து மீள்விக்கப்பட்டது